June 28, 2008

கால்கள் பேசினால்..!!


கதிரவன் மெத்த மெத்தாக சினத்தை தணிக்கும் அந்த பொழுதினில்..பல காலடி சப்தங்கள்..ஒவ்வொரு கால்களும் ஏதோவோர் எதிர்பார்பில் சென்று கொண்டிருக்க..ஒவ்வொரு கால்களை போலவே இந்த கால்களும் பயணிக்கிறது அந்த பொழுதினில்..

அன்றைய பொழுதின் சுமையை இறக்கிய சந்தோசத்தில் அந்த கால்கள் சற்று அதிகமாகவே ஆரவாரமிட்ட வண்ணம் சென்று கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக இன்னொரு கால் இந்த காலுடன் எதிர்பாராத தருணத்தில் மோதி விடுகிறது ..மனங்கள் மட்டுமா ஊடல் கொள்ள வேண்டும் ஏன் கால்கள் கொள்ள கூடாதா.?

ம்ம்..மோதிய கால் கன்னி(யின்) கால்கள் இந்த கால் பட்டவுடனே அந்த முரட்டுகால் மிதுவானது..கன்னி காலின் நாணம் தனை புரிந்த முரட்டுகால் மெதுவாக புன்னகைத்தது..கன்னி கால் மெதுவாக மன்னிப்பு என்றது அங்கே ஆரவாரமிட்ட பல கால்களின் ஓசையில் இந்த கன்னி காலின் சப்தம் புரியுமா என்ன..

இதே சமயம் இந்த கால்களை இன்னோர் உறவு கால் சந்தித்து விட..அந்த கால் தன் நடையின் வேகத்தை குறைத்து தன் வேலை தனை மறந்து இந்த சிந்தனையில் ஓராயிரம் கற்பனை கொள்கிறது..உடனே இந்த உறவு கால் அந்த கால்களை பார்த்து "கா(த)ல்" என்று கால் நீட்ட....

நீட்டிய கால் தேவை அற்ற சுமையை தன்னகத்தே கொண்டதால் காலின் கணம் அதிகரிக்க அந்த கால் மெதுவாக வலிக்க தொடங்க அதையும் தாங்கிய வண்ணம் "நொண்டி நொண்டி" நடந்து..

நொண்டிய கால்கள் தன் உறவு காலை நோக்கி சென்றது..அங்கே சென்ற கால்கள் முழுவதும் சிரிப்புடன் நலம் விசாரித்து தன் அன்பை காட்டி விட்டு எதுவும் தெரியாது போல வலியுடன் மெல்ல நடை போட்டது..போக போக இந்த காலில் வலி கூடியது ஏனேனின் காலில் தேவையற்ற கணம்...

ஆனால் மற்றைய கால்கள் மன்னிப்பை பரிமாறிவிட்டு சென்றுவிட்டது...(அந்த கால்கள் வழமையை விட வேகமாகவே நடந்தன ஏனேனில் அந்த கால்களின் கணம் இல்லை)..

ஆனால் சில கால்கள் தேவையற்ற கணங்களை தன்னகத்தே கொள்வதுடன்..அன்பையும் பரிமாற எப்படி தான் இந்த போலி நொண்டி கால்களாள் முடிகிறதோ தெரியவில்லை...இந்த விடை தெரியாத கேள்விக்கு விடையை யோசித்த வண்ணம் என் கால்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்தது...




அப்ப நான் வரட்டா!!



1 comment:

ஜோசப் பால்ராஜ் said...

அப்ப நான் வரட்டா?
இது என்ட யாழ்கள ஜம்மு குழந்தையேத்தான். சரியே?

ஜம்மு பேபியின்ட வலைப்பூவுக்கு இப்பதான் நான் வாரன்.
என்ட ஜம்மு பேபி சுகந்தானே? நான் யாரென்டு குழப்பமே?
நான் தான் சோழநாட்டு இளவரசன்.