June 07, 2008

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!


எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது..

அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா..

"வானம் மேல
பூமி கீழ
நாம யாழில"

இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேரா விசயதிற்குள்ள வாரன்..

நான் இருக்கிற நாடு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே..ஓ..தெரியாதவைக்காக மறுபடி சொல்லுறன் என்ன..(நான் இருக்கிறது அவுஸ்ரெலியாவில)..உவனை எல்லாம் அந்த நாட்டிற்குள்ள எப்படி அனுமதித்தாங்க என்டு நீங்க மனசிற்குள்ள நினைக்கிறது விளங்குது..(எனக்கும் கன நாளா அந்த சந்தேகம் இருக்கு தான்)..சரி அத விடுவோம் பாருங்கோ..

எங்கன்ட ஆட்கள் இருக்கீனம் தானே அவுஸ்ரெலியா இருக்கிற வெள்ளைகள் வலு மோசம் என்டு எல்லாம் சொல்லுவீனம் நானும் உங்க வர முந்தி அப்படி தான் நினைத்து கொண்டு இருந்தனான் பாருங்கோ..(பிறகு உங்க வந்து பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு அவையள் நல்ல ஆட்கள்)..தாங்களும் தங்கன்டபாடும், எங்களுக்கு அப்படி இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தானே பாருங்கோ.. (டிரெயினில ஏறினா கடசி பெட்டியில இருக்கிற ஆளிற்கு கேட்கிற மாதிரி "வள வள" என்டு கதைத்தா)..அவன் ஒரு மாதிரி பார்க்கமலா போவான்..??

பிறகு சொல்லுறது அவன் இப்படி பார்த்துபோட்டு போறான் உவங்க இப்படி தான் என்டு எல்லாம்..உது சிட்னி "டமிழ்சின்" வழமையான பல்லவி...

அட நான் ஏதோ ஒன்னை கதைக்க வந்துபோட்டு எங்கையோ கதைத்து கொண்டு போயிட்டன் பாருங்கோ...(அது சரி இன்னைக்கு நான் என்னத்தை பத்தி கதைக்க வந்தனான்)..ஓ..ஞாபகம் வந்திட்டு..

அதாவது உங்க இருக்கிற "வெள்ளைகள்" இருக்கீனம் தானே அவையள் தங்கன்ட உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ கண்டால்..(நடுறோட்டில)..என்டாலு��
�் முத்தத்தால் தங்கன்ட அன்பை பரிமாறி கொள்வார்கள்..உங்க வந்த புதிசில எனக்கு எல்லாம் ஒரு மாதிரி இருந்தது ஏன் என்டா இரண்டு வெள்ளை..(நண்பிகள்)..நடுறோட்டில சந்தித்த உடன கட்டி பிடித்து "முத்தம்" மூலம் தங்கன்ட அன்பை பரிமாறி கொள்வீனம் பாருங்கோ..(பார்க்கிற எங்களுக்கு அன்பை பரிமாறுற மாதிரியாக இருக்கும்)..அட நான் சொன்னது வந்த புதிசில பாருங்கோ..

சரி..சரி நீங்க முறைத்து பார்க்கிறது விளங்குது..(அட இது எல்லாம் சகஜமப்பா)..உதை விட யூனி மற்றும் வேலை ஸ்தலங்களிளும் உவ்வாறு தங்கள் அன்பை சக ஊழியர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ பரிமாற்றி கொள்வார்கள்..(வேலை ஸ்தலங்களை விட யூனியில தான் கூடுதலாக உவ்வாறு நடக்கும் பாருங்கோ)..

நீங்கள் இருக்கிற நாடுகளிளையும் உப்படி நடக்கும் என்டு நினைக்கிறன் பாருங்கோ..(எல்லா நாட்டையும் சொல்லவில்லை பாருங்கோ)..

ஓ..உப்படி உவையள் அன்பை பரிமாற்றி கொள்வீனம் பாருங்கோ..(ஆனா நாம உதை எல்லாம் அன்பா பார்போமா என்ன பார்க்கிறியள்??)..எனக்கு கூட ஒரு ஆசை இருந்தது தான் முந்தி யாரும் என் கூடவும் அன்பை பரிமாறமாட்டீனமா என்டு..எனக்கு மட்டுமில்ல என்ன மாதிரி கனபேருக்கு இருந்தது அவையள் எல்லாம் உண்மையை சொல்லமாட்டீனம் நாம சொல்லுவோமல..

போக..போக நேக்கும் எல்லாம் பழகிச்சு..(அச்சோ நான் சொன்ன பழகிச்சு வந்து மற்றவை அன்பை பரிமாறுறதை பார்த்து என்டு சொல்ல வந்தனான் பாருங்கோ)..பிறகு நாமளும் "யூனி" பக்கம் போனா பிறகு அங்கையும் உப்படி தான் கண்ணால மட்டும் தான் பார்த்தது பாருங்கோ..எங்கன்ட தமிழ் பெட்டைகள் இருக்கீனம் அல்லோ அவையள் ஓடி போய் வெள்ளை பெடியன்களோட அன்பை பரிமாறுறது என்டா அவைக்கு அலாதி பிரியம்.. (நாங்களும் தான் இருக்கிறோம் கண்டு கொள்ளவே மாட்டாளவை)..

உப்படியே நாட்கள் கடக்கையில்..(நண்பர்கள் வட்டம் விரிவடைய யூனியில)..அட நம்மளிற்கும் அன்பு பரிமாறபட்டது அல்லோ..அட என்னும் மறக்க மாட்டன் முதல் அன்பு பரிமாற்றத்தை..(அது வந்து விடுமுறை முடிந்து யூனிக்கு போகக்க சக வெள்ளை நண்பியால் பரிமாறபட்டது தான்)..

என்ன பார்க்கிறியள் அட அன்பு என்டு சொல்லி இருக்கிறன் தானே...(ஆனா உந்த விசயத்தை ஒருத்தரும் அம்மாவிட்ட போட்டு கொடுத்திடாதையுங்கோ பிறகு மறுபடி தும்புதடிக்கு வேலை வந்திடும்) ..போக போக உது எல்லாம் சகஜமா போயிட்டு ஆனா நேக்கு வேலையில இருக்கிற பாட்டிமார்கள் "காய் மை டியர்" என்டு சொல்லி அன்பை வெளிபடுத்துவார்கள்...(அவைக்கு தெரியுமோ நேக்கு உந்த பாட்டிமார்களின்ட அன்பு எல்லாம் பிடிக்காது என்டு)...

எனக்கு ஒரு கெட்டபழக்கம் யாரும் "முத்தம்" தந்தா நான் போய் முகத்தை துடைக்கிறனான் அல்லாட்டி கழுவுறனான் ஏனோ எனக்கு பழகி போச்சு..(அரியண்டமா இருக்கு)..சரி உதை விடுவோம் எனி நாங்க எங்கன்ட ஆட்களை பற்றி எனி பார்போம் என்ன..

உப்படி வெள்ளைகள் எல்லாம் செய்யீனம் தானே என்டு போட்டு நம்மன்ட "சிட்னி டமிழ்ஸ்" இருக்கீனம் தானே அவையளும் அன்பை இவ்வாறு பரிமாற தொடங்கிவிட்டார்கள்..(அட அடித்து சொல்லுறன் உவையள் அன்பை பரிமாறக்க கூட "சனியன்" எப்ப போய் தொலைவான் என்டு தான் மனசிற்குள்ள நினைப்பீனம் பாருங்கோ)..

உப்படி தான் அன்னைக்கு நான் ஒரு வீட்ட போனனான்..(தெரிந்த ஆட்களின்ட வீடு தான்)..அங்கையும் உப்படி தான் சின்னனில இருந்து பெரிசு வரைக்கும் உப்படி அன்பை பரிமாறிச்சினம்..நன்ன விசயம் தான் பாருங்கோ இல்ல என்டு சொல்லவில்லை..

உது பத்தாது என்டு அன்னைக்கு நான் "ஸ்டேசனில" நின்று கொண்டிருக்கும் போது தமிழ் பெட்டை ஒருவா பக்கத்தில நின்றவா கொஞ்சத்தலா அவாவின்ட நண்பி வர..(ஓடி போய் "உம்மா" கொடுக்கிறவாம்)..எங்களை கண்டா உவையள் என்னும் கொஞ்சம் கூடுதலா செய்வீனம் அது வேற விசயம் பாருங்கோ..(ஆனா பார்க்கிற எங்களாள தான் சகிக்க முடியல்ல பாருங்கோ)..நானும் அப்ப நினைத்தனான் தான் பக்கத்தில இருக்கிறன் என்ட நண்பனிற்கும் நானும் ஓடி போய் முத்தம் கொடுகட்டோ என்டு ஆனா அவன் என்னை தப்பா நினைத்திட்டாலும் என்டு நான் கொடுகல...

உதை எல்லாம் பார்த்த போது..(வெள்ளை உண்மையில அன்பை தான் பரிமாறுறது விளங்கிச்சு)..உவையள் ஆட்களிற்கு படம் காட்ட தான் உது என்ட மாதிரி விளங்கினாளும் உள்ளுகுள்ள ஒரு சந்தேகம் ஒரு வேளை "முத்தம் கொடுத்து அன்பை வெளிபடுத்துவது தமிழ் பண்பாடா" என்டு..எனக்கு வேற உப்ப சோதனை நடந்து கொண்டிருக்கு என்டாலும் என்ட சந்தேகத்தை ஒருக்கா கேட்டா தான் நிம்மதியா சோதனை செய்யலாம் என்டு போட்டு கேட்டனான் பாருங்கோ..

மறுபடி எல்லாருக்கும் என்ட அன்பான முத்தங்கள்..(என்ன பார்க்கிறியள் நானும் அன்பை பரிமாறுறன் பாருங்கோ)..சரி நான் அங்கால போக பிறகு இங்கால வந்து ஏசுறதில்ல சொல்லிட்டன்..





"நீ முத்தம் ஒன்டு கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கபட்டு சிரித்தா செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்".......





அப்ப நான் வரட்டா!!

No comments: