May 20, 2008

ஜம்முபேபியின் அவலம்!!


எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..என்ன பார்க்கிறியள் நாமளே தான்..அட தலைப்பை பார்த்து போட்டு யோசிக்கிறியளோ ஒமோம் வழமையா நம்ம சாத்திரி அங்கிள் தான் "ஜரோப்பிய அவலம்" எழுதுவார் உது என்ன "ஜம்மு பேபியின் அவலம்" என்று பார்க்கிறது விளங்குது...

ஆனா என்ன அவர் எழுதுற அவலம் வேற நான் எழுத போற அவலம் வேற அது தான் வித்தியாசம் பாருங்கோ..(வாசித்து போட்டு பிறகு என்னை ஏசுறதில்ல சொல்லிட்டன்)..சரி எனி நாங்கள் போவோமோ "ஜம்மு பேபியின் அவலதிற்கு"..

அவலத்தை வாசித்து பிறகு அழுறதில்ல சொல்லிட்டன்....போறதிற்கு முன்னால ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை" சொல்லனும் அல்லோ,இன்னைக்கு என்ன சொல்லுவோம் சரி கிடைத்திச்சு அதாவது நாம எதிர்கொள்ளுற அவலங்கள் தான் நம்மளிற்கு ஏணியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்...இந்த அவலதிற்கு இந்த சிந்தனை கொஞ்சம் "ஓவர்" தான்...சரி எனி விசயதிற்கு போவோம்..

அன்னைக்கு சனிகிழமை இருக்கும் என்று நினைக்கிறன் வழமையா நாம சனிகிழமை என்டா பின்னேரம் 3 மணி போல தான் எழும்புவோம் அது வேற விசயம் பாருங்கோ..(இப்ப உங்க குளிர் வேற தொடங்கிட்டு அல்லோ)..அன்றைக்கு ஒரு மாதிரி எழும்பி எங்கையாச்சு ஊர் சுத்த போவோமா என்று யோசித்து கொண்டிருக்கையில மாமி வந்து சொன்னா ஒருக்கா வாடா என்னோட ஒரு இடத்தை போகனும் என்று..

அட நேக்கு சா என்று போயிட்டு..(பின்ன நம்மன்ட ஊர் சுத்துற "பிளான்" (திட்டம்) எல்லாம் என்னாகிறது என்று தான் ஆனாலும் ஒன்னும் செய்ய ஏலாது அல்லோ வாறன் என்று சொல்லி போட்டன்,ஒரு மாதிரி வெளிகிட்டு காரில ஏறி போக வேண்டிய இடதிற்கு போயிட்டோம் ..(காரை பார்க் பண்ணி போட்டு நடக்க வேண்டியதா போயிட்டு)..

அப்ப மாமி கூட நடந்து கொண்டு போகக்க..(வேறேன்ன மாமி கூட கதைக்க போறன் ஊர் வம்பளக்கிறது தானே)..ஏனென்டா நாம "கோம்புஸ்" என்ற இடதிற்கு தான் போனனாங்க சிட்னியில அநேகமான "டமிழ்ஸ்" இருக்கிற இடம் என்றா உந்த "கோம்புஸ்" தான் உந்த இடத்தை பற்றி சொல்லனும் என்டா சொல்லி கொண்டே போகலாம் குட்டி யாழ்பாணம் என்று நம்ம டமிழ்ஸ் அந்த இடதிற்கு பெயரும் வைத்திருக்கீனம்...

உந்த இடத்தில நம்மன்ட ஆச்சிமார்,அப்புமார் எல்லாம் இருந்து சமா எல்லாம் வைப்பீனம் பாருங்கோ அட அட அப்படி பட்ட ஒரு இடம்,இன்னொன்று முக்கியமான விசயம் தமிழ் பெட்டைகளை "சைட்" அடிக்கனும் என்டா உந்த பக்கம் வரணும் ஏனேன்டா உங்க தான் எல்லாரும் இருக்கீனம்..(ஒன்னு சொல்ல மறந்திட்டன் எங்கன்ட கந்தப்பு தாத்தா கூட உந்த அப்புமார் கூட்டதோட சேர்ந்து அரட்டை அடிக்க வாறவர் )..

இப்படிபட்ட ஒரு இடத்தில ஊர் வம்பளந்து கொண்டு நடக்கிறது தனிசுகம் பாருங்கோ..(உதில முக்கியமான விசயம் என்னவென்டா இந்த பக்கம் நாம அடிகொருக்கா வாறது தான் ஆனா இப்ப மாமி கூட வாற படியா அச்சா பிள்ளையாட்டம் வாறோம்)..சரி..சரி கண்டுகொள்ளாதையுங்கோ..

இப்ப என்ன விசயம் என்டா நாம "பிரண்ட்ஸ்" கூடப் போகக்க நம்ம வழியே தனி வழியா இருக்கும் இப்படி மாமி அல்லது சொந்தகாரங்க கூட போகக்க ஜம்மு பேபி எனி மேல் இல்லாத அச்சா பிள்ளை..(அட நம்ம பசங்க நான் இப்படி யார் கூடவும் போகக்க வந்தா அப்படி இப்படி கண்ணை காட்டிடுவோம் உடனே அவங்களும் அடக்கி வாசித்துடுவாங்க பாருங்கோ) ..உதுகான்டி நினைக்கிறதில்ல மாமிக்கு நம்மளை பற்றி தெரியாது என்டு நன்னா தெரியும் என்டாலும் ஒரு நடிப்பு தானே....

பிறகு என்னவென்டா நேக்கு உங்க இருக்கிறவன் எல்லாரும் பிரண்ட் ஏனேன்டா அந்த இரகசியத்தை சொல்லுறன் கேளுங்கோ..(நாம் வந்து நம்ம "யூனி" பக்கம் போறோமோ இல்லையோ சிட்னியில இருக்கிற எல்லா "யூனி" பக்கவும் போவோம்)..ஏனென்டு உங்களுக்கு தெரியும் தானே..(சரி..சரி கண்டு கொள்ளாதையுங்கோ)..

உப்படி போறதால எல்லாரையும் தெரியும்...(அட நான் மட்டும் இல்ல உங்க இருக்கிற எல்லாரும் உப்படி தான் பாருங்கோ)..அட உதுக்காக நினைக்கிறதில்ல நான் என்ட "யூனி" பக்கம் போறதே இல்லை என்டு அங்கையும் போறனான் அல்லோ..அப்பப்ப நாம போவோம் வருவோம் இருப்போம்..

உப்படி போறதால அங்க இங்க என்டு நம்மளிற்கு "தோஸ்த்மார்கள்"...அட சிலர் வந்து என்ட பெயர சொல்லுவாங்க நான் யாரென்று வேற யோசிக்கிறது அத விடுவோம்...(உப்படி எல்லாம் நான் செய்யிறது வீட்ட தெரியாது அல்லோ)...

சரி எனி அன்னைக்கு நடந்ததை பார்போம் என்ன...

இப்படி,நானும் மாமியும் நடந்து கொண்டு போகக்க ஒருத்தன் என்ட பெயர சொல்லி கூப்பிட்டன்..(நானும் யாரடா இவன் என்று திரும்பி பார்த்தா)..எங்கையோ பார்த்த மாதிரி தான் இருக்கு ஆனா எங்க என்டு விளங்கள்ள அவன் ஓடி வந்து "எப்படிடா மச்சி" என்று கேட்க நாமளும் இருக்கிறோம்டா என்று சொல்லி போட்டு யாரேன்று யோசித்து கொண்டிருந்தேன்...

உடனே வந்தவன் அங்கால மாமி இருக்கிறாவே என்டு கூட யோசிக்காம ஏன்டா இப்ப நம்ம "யூனி" பக்கம் வாறதில்ல மச்சி என்ன ஆச்சு என்டு கேட்க.. (அப்ப தான் நேக்கு விளங்கிச்சு ஓ அவனா இவனென்டு)..என்ன செய்யிறது பக்கதில வேற மாமி உவன் கதைத்து கொண்டே போறான் அங்கால மாமிக்கு சிரிப்பா இருக்கு நமக்கு எப்படி இருக்கும்..(என்ட யோசனை எல்லாம் உவனை எப்படி கழற்றி விடுறது என்று)..

ஆனா அவனும் விடுற மாதிரி இல்ல கிளறி கொண்டே போறான்..(மனசில அட நேரம் காலம் பார்த்து கதைக்க தெரியாதா என்று கோபம் வருது ஆனா என்ன செய்ய)..உடனே உந்த கதையை மாத்த இது தான் என்ட மாமி என்று சொல்ல அப்ப தான் அவனுக்கு மாமி என்டே விளங்கிச்சு..அவரின்ட முகமும் ஒரு மாதிரி போச்சு..(அப்ப நமக்கு எப்படி இருக்கும் பாருங்கோ)..

உடனே அவர் சரிடா நான் போகணும் என்டு போட்டு போயிட்டான்..(கடசியா மாற்றுபட்டது யார் நாம தானே)..உடனே நன்ன பிள்ளையாட்டம் நடிக்கமாட்டோமா என்ன..(மாமி வேற ஒன்னுமே கேட்கிறா இல்ல கேட்டு போட்டா என்டா நம்மளிற்கு நிம்மதி அல்லோ)..அட அவாவிற்கு நம்மள பற்றி நன்னா தெரியும் தான் ஆனா இப்படி எல்லாம் தெரியாதே என்ன..

வரவேண்டிய இடதிற்கு வந்திட்டோம் அங்க பார்த்தா ஒரு பொண்ணு...(அது என்ன கொடுமை என்டா அதையும் எனக்கு தெரியும் ஏனென்டா இப்படி இன்னொரு "யூனி" பக்கம் போகக்க கண்டது தான்)..அவா உடனே "காய்" என்று சொல்ல நாமளும் சிரித்து கொண்டு சொன்னது தான்....(ஒரு மனிசனிற்கு இப்படி எல்லாம் சோதனை வரணுமா என்ன)...

அப்படியே வந்த அலுவலை முடித்து போட்டு வரக்க..(நாம அப்பவும் நன்ன பிள்ளையாட்டம் தான் வாறோம்)..உடனே மாமி அங்க ஒரு பெட்டை போறா அவளையும் தெரியுமோ என்று கேட்டு சிரிக்க...(அட நாம என்ன செய்ய முடியும் பாருங்கோ)..

கடசியா ஒரு மாதிரி வீட்ட வந்து சேர்ந்தாச்சு..(வீட்டையும் எல்லாரும் நக்கல் தான் என்ன செய்யிறது)...அன்னைக்கே நினைத்திட்டன்..(எனி மற்ற "யூனி" பக்கம் போறதில்லை என்று அது தான் இல்ல)..எனி சொந்தகாரங்க கூட எல்லாம் தமிழ் ஆட்கள் இருக்கிற பக்கம் போகவே கூடாது என்று..

அட என்ன பார்க்கிறியள் இது தான் என்ட அவலம்...(ஏன் உது அவலம் இல்லையோ அந்த இடத்தில நின்று பார்த்தா தான் விளங்கும்)..அப்பப்ப நேக்கு அவலங்கள் வரும் ஆனா இப்படியான அவலங்கள் தான் அப்பப்ப உங்களை சந்திக்கிறேன் என்ன...

உங்களுக்கு ஏதாச்சும் உப்படியான அவலங்கள் நடந்திருந்தா சொல்லுங்கோ பார்போம்..(அட வெட்கபடாம சொல்லுங்கோ நானே வெட்கபடல்ல)..அட நான் எப்ப தான் வெட்கபட்டிருக்கிறேன் என்ன..ஒன்னு சொல்லட்டோ பல அவலங்கள் வருவது "அவளாள்" தான்..

அடுத்த அவலத்துடன் அவலமாக வருகிறேன்..(நீங்கள் இதை வாசித்து பட போகும் அவலங்களுக்கு இப்பவே என்ட வாழ்த்துக்கள்)..

அப்ப நான் வரட்டா!!

May 19, 2008

அழுக்கு!!

ஆக்கம் -
களவாஞ்சிகுடி யோகன்..!!





அலுவலக மாதந்தம் கூட்டத்தில் இருந்த போது தான் அந்த அழைப்பு.கைத் தொலைபேசியைத் தூக்கி இலக்கங்களை பார்த்தான் "பிறைவேற்" என்று விழுந்திருந்தது.பட்டனை அழுத்தி "கலோ" என்ற பொழுது மறுமுனையில் தெய்வேந்திரன் அங்கிள்.

"எப்படியிருக்கிறீர்கள் தம்பி?" கேட்டார்.சுகத்தைக் கூறி என்ன விஷயம் அங்கிள்?" என்று விசாரித்தான் செல்வன்.

"இந்த சனி ஞாயிற்கு ஏதாவது அலுவல்கள் இருக்கிறதோ?"

"ஏன் அங்கிள்?"

"ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ கதைக்க வேணும்."

தொலைபேசியைத் துண்டித்துவிட்டு கூட்டத்திலே கவனம் செலுத்தத் தொடங்கினான்.கூட்டம் முடிந்த பின்னர் தெய்வேந்திரன் அங்கிள் ஞாபதிற்கு வந்தார்.அவரோடு செல்வனுக்கு பன்னிரன்டு வருடப் பழக்கம்.செல்வன் அவுஸ்ரெலியா வருவதிற்கு ஊக்குவித்த நண்பன்,அவன் இங்கு வந்திறங்கிய பொழுது "சிட்னி" மாநிலதிற்கு வேலை பெற்று போயிருந்தான்.ஆனாலும் அவனின் நண்பனின் நண்பனொருவன் அவனுக்குச் சில அடிப்படை உதவிகளைச் செய்து கொடுத்தான்.அந்த உதவியால் முதன் முதலில் வாடகை வீடோன்றுக்கு போன போது,பக்கத்துக் குடியிருப்பில் தெய்வேந்திரன் அங்கிளின் வீடு."ஊரிலே" டிப்போ ஒன்றில் வேலை செய்தவர்,கொஞ்சம் புளுகுதான் ஆனாலும் உதவி செய்யும் மனபான்மை உள்ளவர்."என்று அங்கிளை பற்றி அறையில் உள்ள சிநேகிதர்கள் செல்வனுக்குச் சொன்னார்கள்.புதுப் பொடியன் ஒருவன் வந்திருக்கிறான் என அறிந்து செல்வனைக் காண அங்கிள் வந்தார்."டை" அடித்த தலையிலே தொப்பியொன்றை அணிந்திருந்த அவர்,கதைக்கும் பொழுது பரஸ்பர அறிமுகத்திற்கும் பின்னர்,ஊரிலுள்ள பலரது பெயர்களைக் கூறியவர்களில் சிலரைத் தான் செல்வனுக்கு தெரிந்திருந்தது.ஆனாலும்,"நீர் நமது பிள்ளை தான்,உமக்கு என்ன உதவிகள் தேவைபட்டாலும் தயங்காமல்வாரும்."என்று கூறிவிட்டுப் போனார்.

பின்னாளில் செல்வன் படித்து,வேலை பெற்று புது இடத்திற்கும் போய்விட்டான்.அங்கிளும் புதுவீடு வாங்கிக் கொண்டு பிறிதொரு ஊருக்கும் போயிருந்தார்.அப்படியிருந்து??் இருவருக்குமிடையில் தொடர்பு இருந்து கொண்டுதானிருந்தது.இரண்டு மாதங்களுக்குமுன் அங்கிள் தம்பதியினரின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.செல்வனுக்கும் அழைப்பு.பரிசுப் பொருட்களோடு சென்று வாழ்த்திவிட்டு வந்தான்.

"அங்கிள் அலுவல்கள் இல்லாமல் அழைக்கமாட்டர்,ஞாயிற்றுக் கிழமை போனால் தெரிந்துவிடும்."நினைத்து கொண்டான்.பின்னேர வெயில் மறைந்துபோயிற்று,அங்கிளின் வீட்டுக்கும் போக ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது.செல்வன் கதவை திறந்தான்.வெளியே புருஷோத்....

"வா மச்சான்,உனக்கு கல்யாணமெல்லாம் முற்றாகியிருக்குதாம்."

"ஓமடா,கல்யாணமென்று ஏற்பாடு பண்ணியாட்டி,காசு தான் கையில் இல்ல,அது தான் உன்னட்டக் கொஞ்சம் மாறலாமென்று வந்தனான்."

"போன கிழம தான் ஊருக்கு காசு அனுப்பினனான்,இப்ப என்னட்ட காசு இல்லை மச்சான்."செல்வன் கூறினான்.

"இல்லடா செல்வா,உன்னை நம்பி தான் வந்தனான்,நீ சீட்டும் எடுத்த நீ என்று கேள்விபட்டனான்,எப்படியோ மாறியெண்டாலும் உதவி செய் மச்சான்."

செல்வன் ஆச்சரியபடும் விதத்தில் புகைபடத்திலே அந்தை பெண் அழகாய்த் தெரிந்தாள்.அவனுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் சேலை உடுத்திருந்தாள்.குங்குமப்பொட்டோடும் திருத்தமான அவயங்களோடு தெளிவாய்த் தெரிந்தாள் அவள்.புகைபடத்தைப் பார்த்து அவன் சற்றுத் தடுமாறியது உண்மை.

"என்ன சொல்கிறீர்?" தெய்வேந்திரன் அங்கிள் கேட்டார்.

"என்னுடைய முடிவு மட்டும் இறுதி முடிவு இல்லை அங்கிள்.ஊரிலும் கேட்க வேணும்,

அதுவும் சரியென்றால் நான் ஊருக்கு போக இருக்கிறன்,போகிற போது இந்தப் பெண்ணைச் சந்தித்து இருவரும் மனம் விட்டுக் கதைத்து,விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து,இருவருக்கும் பிடித்துச் சம்மதம் என்று வந்தால் செய்யலாம் ஆனால் அதற்கிடையில் என்னைவிட நல்ல வரன் அமைந்தால் நீங்கள் செய்து கொடுங்கள் பிரச்சினையில்லை."என்றான் செல்வன்.

"எப்ப மட்டில் ஊருக்கும்போக இருக்கிறீர்?"அங்கிள் கேட்டார்,
செல்வன் குறிப்பாக போகும் நாள் பற்றி சொன்னான்..

"நீர் ஊருக்கு போய் பார்த்து முடிவு சொன்ன பிறகு தான் நாங்கள் வேறு வரன் பாக்கிறதப் பற்றி யோசிப்பன்,என்னப்பா?"என்று ஆன்ரி,அங்கிளின் துணையோடு சொன்னாள்.இருவரும் புறப்ப்ட ஆயத்தமானார்கள்..

"இவ்வளவு வசதியான வீட்டில் நீர்மட்டும் தனியாகவா இருக்கிறீர்?,அதுவும் இந்த இடத்தில்?"புறபடும் போது அங்கிள் இரண்டு தடவைகள் கேட்டார்."ஏன் அங்கிள் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்,தனியாக இருந்துவிட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்கலாமல்லவா?"என்று சொல்லி விட்டான் செல்வன்..

ஒரு சனி கிழமை மதியம்.கல்யாண வீடொன்றில் செல்வன் சாப்பிட்டு கொண்டிருந்தான்.அப்பொழுது அங்கிளின் தொலைபேசி அழைப்பு.

"உம்மை பெண்வீட்டாருக்கும் பிடிக்கவில்லையாம்,அதனால் இந்த சம்பந்தத்தை நாங்கள் கைவிடுவோம்."என்று கூறிவிட்டுத் தொலைபேசியை துண்டித்துக் கொண்டார்.

அங்கிளின் அன்புபிடியிலிருந்து விடுபட்டதில் செல்வனுக்கு ஓரளவு நிம்மதி ஆனாலும் என்ன காரணமாக இருக்க கூடும் என்ற நினைப்பு நெஞ்சிலே எழுந்தது."ஒருவனை என்னைவிடத் தகுதியான மாப்பிள்ளை அவர்களுக்கு கிடைத்திருக்க கூடும்."என்ற ஜதார்த்த சிந்தனையோடு அதை பற்றி மறந்திருந்தான்.

முருகன் கோவிலின் கும்பாபிஷேகத் தினம்.அலையலையாக மக்கள் கூட்டம்.செல்வனும் அந்த கூட்டத்தில் ஒருவனாக நின்றான்,நிர்மல மூர்த்தி அண்ணணும் கோவிலிலே தென்பட்டார்.குடும்பத்தோடு அவர் சாமி கும்பிட வந்திருந்தார்.பல மாதங்களுக்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள்.

"எப்படி இருக்கிறீர் செல்வா?தெய்வேந்திரன் அங்கிள் கல்யாணமெல்லாம் பேசினவராமே?கேள்விபட்டேன்?"நிர்மலமூர்த்தி அண்ணன் கேட்டார்.அங்கிளோடு நெருங்கி பழகுபவர் நிர்மல மூர்த்தி அண்ணன்.அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் செல்வன்.ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ந்தவற்றை அவருக்கு சொன்னான்.

"பெண் வீட்டார் யாரும் உம்மை வேண்டாமென்று செல்லவில்லை அங்கிளுக்கு உம்மேல சந்தேகம்,அந்த இடத்தில் நீர் தனியாக வசிக்கிறீராம்,ஏன் இவர் தனியாக இருக்க வேண்டும்,நிறைய பெட்டைகளோடு இவருக்குத் தொடர்பு இருக்க வேண்டும்,அது தான் தனியாக இருக்கிறார் என்பது அவரின் கணிப்பு.அது போக நீர் இருக்கும் ஏரியாவில் விலைமாதர் விடுதியும் இருகிறதாம்,நீர் அங்கேயும் அடிக்கடி போய்வரக் கூடுமாம்,இந்தச் சந்தேகங்களோடு புருஷோத்திடமும் கேட்டிருக்கிறார்,அவனுக்கு உம்மீது என்ன கோபமோ தெரியாது,செல்வனுக்கு நிறைய பெட்டைகளோடு தொடர்பு இருக்கிறது தான் அங்கிள் அது தான் அவன் தனியாகவே இருக்கிறானென்று அவனும் சொல்லியிருக்கிறான்,அதனால் தான் அங்கிளே உனக்கு இந்த முடிவைச் சொல்லியிருக்கிறார்."

நிர்மலமூர்த்தி அண்ணணின் கதையை கேட்டுச் செல்வனுக்குக் கோபம் வரவில்லை.சிரிப்பு தான் அதிகம் வந்தது.ஆனாலும் புருஷோத்தும் இப்படி சொல்லியிருக்கிறானே என்று தான் வேதனை.

"கல்யாணதிற்குப் பண உதவி செய்யவில்லையென்பதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறான்,இவனெல்லாம் ஒரு சினேகிதன்."அலுத்துக் கொண்டான் செல்வன்.

மழைதூறி கொண்டிருக்கிற மாலைபொழுது அது.காதுமடல்களைக் கூட விறைக்க வைக்கும் குளிர்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.செல்வன் வானொலிப் பணி முடிந்து திரும்பி கொண்டிருந்தான். அந்தப் பாதையால் அவன் போக்குவரத்துப் பண்ணுவதென்பது அபூர்வம், உண்மையில் அப்பாதையால் வந்தால் அவனின் வீட்டை குறுகிய நேரத்திற்குள் அடைந்துவிட முடியும். ஆனாலும் அவன் அதை உபயோகிப்பது குறைவு. அந்தப் பாதையில் தான் விலைமாதர் விடுதியொன்று இருக்கிறது..

அதானால் அதைத் தவிர்த்துவிடுவான் செல்வன்..
அன்று அவசரமாகத் தொலைபேசி அழைபொன்று ஊரிலிருந்து வர வேண்டியிருந்ததால் அந்த பாதையினூடாக வீட்டை நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.முன்னோக்கிய வாகனங்களின் தாமதத்தினால் அவனும் காத்து நிற்க வேண்டிய நிர்பந்தம்.
காரை நிறுத்தியிருந்த பொழுது செல்வன் கண்ட காட்சி அவனின் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.தெய்வேந்திரன் அங்கிள் விலைமாதர் விடுதிக் குள்ளிருந்து வந்து கொண்டிருந்தார்.முன் வாயிலுக்கு வந்தவர் றோட்டில் இரண்டு பக்கத்தையும் பார்த்து விட்டு,கையிலிருந்த தொப்பியை தலையிலே அணிந்தபடி கட கடவென்று தனது காரைநோக்கி நடந்து கொண்டிருந்தார்,அக்காட்சியை செல்வனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

"உள்ளம் ஏனோ குமுறிக் குழம்பியது"...

"தங்களிடமுள்ள அழுக்கான எண்ணங்களும் அழுக்கான குணங்களும் மற்றவர்களிட்டமும் தென்படும் என்ற தவறான கணிப்பு.எவ்வளவு தவறான கணிப்பு இது..மாபெரும் தவறானது இந்த கணிப்பு என்று இவர்கள் இனி எப்பொழுது உணர்ந்து கொள்ள போகிறார்கள்.உணராவிட்டால் கூட இவர்களையெல்லாம் என்ன தான் செய்து விட முடியும்,இப்படியானவர்களுக்க??எல்லாம்
வெட்கமில்லை?"

வீட்டுக்கு வந்து சேர்ந்த போது செல்வனின் மனம் அமைதியின்றியே இருந்தது..





(எமது அனுமதியின்றி இவ் ஆக்கத்தை பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம் உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி)..

ஆக்கம் -
களவாஞ்சிகுடி யோகன்!!





அப்ப நான் வரட்டா!!

May 18, 2008

எங்கள் வீட்டு பூனை

எப்படி இருக்கு என் பூனைக்குட்டி?
இதுவும் நான் பாலர்வகுப்பில் படிச்ச தமிழ்ப்பாட்டு தான். நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப்பாட்டு சொல்லி கொடுங்கோவன்





அப்ப நான் வரட்டா!!

May 17, 2008

இங்கேயும் ஒரு அவலம்!!

ஆக்கம்
களுவாஞ்சிக்குடி யோகன்





கடிதம் வந்திருந்தது.நாட்டிலிருந்து தங்கை அனுப்பியது.பிரித்து சாதரணமாகத் தான் படிக்க ஆரம்பித்தாள்.வாசித்து முடிந்ததும் அழுதே விட்டாள் யாமினி.கண்களிலிருந்து நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியிருந்தது.

நிறைந்த கண்ணீரோடு மீண்டுமொருமுறை அதை வாசிக்கத் தொடங்கினாள்.அக்கா,நாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை.அது தீர்ந்து மறுபடியும் சமாதானம் உருவாகுமென்ற நம்பிக்கையும் எம்மிடமிருந்து விட்டுப் போயிற்று.அப்படியான நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடக்கின்றன.

செல் விழுந்து அப்பாவிற்கு ஒரு கால் ஊனமானது உனக்குத் தெரியும்,அன்று இராணுவத்தினர் திடீரென ஊருகுள் புகுந்து விட்டார்கள்.அயலில் யாரும் இல்லை.பக்கத்து வீட்டுச் சின்னதங்க மாமி கூட பிள்ளைகளைக் கூட்டிகொண்டு ஓடி விட்டார்.அப்பாவைத் தனியாக விட்டு விட்டு என்னால் எப்படி ஓடமுடியும்,நான் வீட்டிலே ஒளிந்து கொண்டேன்.

வீட்டுகுள் நுழைந்த இரு இராணுவத்தினர் என்னைக் கண்டு விட்டனர்.அதில் ஒருவன் வந்து என் கைகளை இழுத்தான்.நான் திமிறினேன்.என் பலமெல்லாம் அவனுக்கு ஒரு தூசுபோலத் தானே.அவன் தவறான எண்ணத்தோடு மேலாடையைக் கிழித்துக் கொண்டான்.இதை பார்த்த அப்பாவால் எப்படி சும்மா இருக்க முடியும்?அவர் வைத்திருந்த ஊன்றுகோலால் அவனைத் தடுத்து தள்ளினார் ஆத்திரமடைந்த அவன் அப்பாவைப் பிடரியில் பிடித்துத் தள்ளி துப்பாக்கியால் அடிக்கத் தொடங்கினான் .மயங்கி கிடந்த அவருக்கு அப்பொழுதே உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

நான் அப்பாவை பார்பனோ?என்னைப் பாதுகாப்பனோ?தடுமாறி அவரின் மேல் விழுந்து சத்தமாக அழுது கொண்டிருந்தேன்.நான் போட்ட கூச்சலில் கடவுள் போல் இராணுவக் காமண்டர் ஒருவன் உள்ளே வந்தான்.

நடந்தவற்றை நேரில் கண்ட அவனுக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும்.ஆத்திரத்துடன் அவர்களை பார்த்து ஏதோ பேச அவர்கள் அமைதியாக வெளியேறிப் போனார்கள்.
அக்கா,அப்பாவின் உயிரைக் கொடுத்து தான் எனது மானத்தைக்......காப்பாற்ற வேண்டியிருந்தது இன்னுமொருமுறை மானத்தைக் காக்க எனக்காக இங்கு உயிரை விட யாருமேயில்லை.

இப்பொழுதெல்லாம் எனக்கு வாழ்க்கையில் எந்தவொரு பிடிப்புமே கிடையாது.ஜடமாகத் தான் இன்னமும் உலாவுகின்றேன்.அம்மா இறக்கும் போதே நானும் போயிருக்க வேண்டியவள்.எனது விதி இன்னமும் இந்த அவலங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்..

இப்படியா தொடர்ந்தது அந்த நான்கு பக்கக் கடிதம்.
யாமினியும் சுவிசுக்கு வந்து மூன்று வருடங்களாகிறது அவள் வரும் போதே தாய் உயிருடன் இருக்கவில்லை.முதல் வருடமே "செல்" விழுந்து மாண்டு போனாள். தகப்பனின் துணையுடன் தான் ஒரே தங்கை பிரியா இருந்து வந்தாள்.அவர்களுக்கு யாழ்பாணத்தில் பெரியளவு சொந்தபந்தங்கள் இல்லை.
தகப்பனுட கூடப் பிறந்தவர் ஒருவர் .அவர் கொழும்பில் வாழ்கின்றார். அவருக்கு சொந்த பந்தங்கள் பற்றி அறிய ஆவலில்லை.தாயோ கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்.தகப்பன் இளைஞனாக இருந்த காலத்தில் மட்டக்களப்பிற்கு படிப்பிக்கப் போனபோது படிபித்த மாணவியையே மனைவியாக்கி கொண்டு அங்கேயே இருந்து விட்டார்.
அதனாலோ என்னவோ அங்கு இன்று வரை அவர்களுக்கு எந்தவித ஒட்டுறவும் கிடையாது.
இந்த மார்கழி வந்தால் பிரியாவிற்கு இருபத்தி மூன்று முடிகிறது.வாழவேண்டிய வயதில் எத்தனை துன்பங்கள் அவளுக்கு.தன்னந்தனியாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றாள்.

யாமினிக்கு நெஞ்சு பதறியது.சகோதர பாசம் மேலோங்கக் குமுறினாள்.குமிறிக்கொண்டே அழுதாள்.கடிதம் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது.
யாமினி - சேகருக்கு ஒரே வாரிசு ஒரு வயசு சுவான்.அறையில் தூங்கி கொண்டிருந்தவன் எழுந்து அழத் தொடங்கினான்.குழந்தையின் அழுகை கேட்டவள் சட்டென நினைவுக்குத் திரும்பினாள்.கண்ணீரை கைகளால் துடைத்தவாறே எழுந்து போனாள்.குழந்தையை தூக்கி வந்து பால் கொடுக்கும் போது சுவரில் தொங்கியிருந்த குருவி பதினொரு முறை கூவி மெளனமானது .சேகர் வந்து விடுவார் சமைக்க வேணும் என உள் மனம் சொல்லியது.அப்போது மடியிலிருந்த சுவான் உறங்கியிருந்தான்.மறுபடியும் குழந்தையை தொட்டிலில் வளர்த்தியவள் திரும்பி வந்து சமையலறைக்கு போனாள்.
இரண்டரை போல் வேலையிலிருந்து சேகர் வந்தான்.வழமையான வரவேற்பு இல்லாத மனைவியை பார்த்து அவனுக்கு யோசனை.

"ஏன் முகத்தை உம்மென்று வைத்திரூக்கிறாய்?'
அவள் எதுவும் சொல்லாமல் கடிதத்தை கொடுத்தாள்.
வாசித்து முடிந்து நிமிர்ந்த போது மனைவியின் கண்களில் நீர்

பிரியமானவளின் கண்ணீரைப் பார்க்கச் சகிக்காதவனாய்,
"இதுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?"நீயே சொல்
என்றான்.
"என்ன செய்ய முடியும்?அவளை இங்கே கூப்பிடுறது தான்
ஒரே வழி"
'கூப்பிடுதெண்டால் விளையாட்டா?"சேகர் உணர்ச்சிவசபட்டு போனான்.
"எங்களுக்கு இருக்கிற பிரச்சினை எனக்கு தெரியும்.ஆனால் அவளுக்கு.எங்களை விட்டா வேற யார் இருக்கினம்?அதனாலையப்பா கடனோட கடனா அவளை இங்க கூப்பிடுவன்.இப்பவே சீட்டு ஒன்று ஆரம்பியுங்கோ.பிரியா வந்தாப் பிறகு சுவானை அவளிடம் விட்டுப் போட்டு நானும் வேலைக்குப் போறன்.அதனாலை கடனுகளை ஒரளவுக்கு சமாளிக்கலாம் "தகப்பன் இறந்த துக்கம் மனதில் இருந்தாலும் தங்கையை பற்றி நினைத்திருந்தனயெல்லாம் ஒப்புவித்தாள் யாமினி.
சேகர் எதற்கோ யோசித்தான்.ஆனால் யோசனை நீடிக்கவில்லை.
சரி அவளை கொழும்பிற்கு வரச் சொல்லி கடிதம் எழுது என மனைவிக்குச் சொன்னான்.
இயந்திர வாழ்க்கையில் நான்கு மாத நான்கு நிமிடமாய் ஓடியது.
ஜரோப்பாவில் ஒரு கோடை காலம்.எதை பார்பது.எதை ரசிப்பது எனக் குழம்பிவிட்டாள் பிரியா. அந்தளவிற்கு அழகாகவும் வளமாகவும் செழித்திருந்தது சுவிற்சலாந்து.
எதிர்பார்த்ததை விட ஒரு படி உயர்ந்திருந்தது அவள் வந்திறங்கிய நாடு.

பிரியா அக்கா குடும்பத்துடன் அறையில் அமர்ந்திருந்தாள்.தனக்கு நேர்ந்த துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.அப்போது யாமினி கணவரிடம்
'நாளைக்கு லீவு எடுக்கிறீங்களா?"என்று கேட்டாள்.
லீவா?எதற்கு?
இவளை பொலிசில் பதிய வேணும்.
'இதோபார்.பிரியா இங்கு வந்ததோடை என்னடை கடமை முடிஞ்சு போச்சு.
நீயே இனி எல்லாத்தையும் கவனிச்சு கொள்.நான் இவளைக் கூட்டிக்கொண்டு போக அதை பார்த்த எங்கட சனம் நாலு கதை கதைக்க.
இதெல்லாம் வேண்டாமப்பா.ஒதுங்கிக் கொண்டான் சேகர்.
'சரி.நானே கவனிக்கிறேன்'என்றாள் யாமினி.
நாட்கள் மிக வேகமாக ஓடுகிறதென்று தான் சொல்லத் தோன்றும்.பிரியா வந்தே நான்கு மாதமாகிவிட்டது யாமினியும் வேலைக்குப் போக தொடங்கியிருந்தாள்.அவள் காலையில் போய் மாலையில் வீடு திரும்புவாள்.சேகர் நான்கு மணித்தியால ஓய்வுக்கு வீடு வந்து திரும்பவும் போவான்,இந்த நேரம் அத்தானும் அக்காவும் பிரியாவிற்கு மாப்பிள்ளையும் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

அன்றைக்கு சேகர் வேலை முடிந்து வந்தான்.அவனுடன் ஒரு வாலிபனும் கூட வந்திருந்தான்.அவனுக்கு வி.ஜ.பி வரவேற்புக் கொடுத்தாள் யாமினி.சேகரும் அவளும் சாப்பாடும் கொடுத்தனுப்பினார்கள்.
அந்த இரவே யாமினி தங்கையிடம் கேட்டாள்.
'இப்போ வந்தவனை பற்றி என்ன நினைக்கிறாய்?'
அவள் பதிலுக்கு காத்திராத சேகரும்
'அவனை உனக்குப் பிடிச்சிருக்கா"என்று விசாரித்தான்.
அப்பொழுது தான் பிரியாவிற்குத் தெரிந்தது அவன் தன்னைப் பார்க்கத் தான் வந்திருகிறானென்று
அவனை அவளுக்குப் பிடித்துத் தான் இருந்தது,அகன்ற விழிகள்.அரும்பான மீசையுடன் செக்கச் செவேலென அடக்காமாக இருந்தான்.எந்த பெண்ணுக்கும் அவனை வெறுக்கத் தோன்றாது.
ஆனால் திடீரெனக் கேட்டதும் கூச்சபட்டுப் போனாள்.எதுவும் கதைக்கவில்லை.நாணத்துடன் நிலம் பார்த்தாள் இதை புரிந்து கொண்ட யாமினி.
இதிலென்னப்பா அவளுக்கு விருப்பு வெறுப்பு.நாங்களென்ன அவளைப் படுகுழியிலா தள்ளப் போறம்.நீங்கள் மேற்கொண்டு அவனுடன் கதையுங்கோ"என்றார்.
அன்றைக்கு காலநிலை அவ்வளவு நன்றாக இல்லை.
பன்னிரென்டு மணிக்கு முன் உடம்பைச் சுட்டெரிக்கும் வெயிலாக கொழுத்தியது.பிற்பாடு பனிகொட்ட ஆரம்பித்திருந்தது.சாப்பிட சேகர் நேராகக் கட்டிலில் போய்ப்படுத்திருந்தான்.
"அத்தான் சாப்பிடேல்ல"போய்க் கேட்டாள் பிரியா.

'பசியில்லை தலையிடிக்குது"என்றான் அவன்.
அலுமாரிக்கு வந்து மாத்திரை எடுத்தாள்.மீண்டும் போய்'இந்தாங்க அத்தான் பனடோல்'நீட்டினாள்.
கட்டிலிருந்து எழுந்த சேகர் ஒரு கையால் பனடோலை வாங்கினான்.அடுத்த கையால் பிரியாவின் இடது மணிகட்டை இறுக்கமாகப் பிடித்து இழுத்தான்,இதை கடுகளவும் எதிர்பார்க்காத அவள் கலங்கிபோனாள்.
ஆத்திரமான தயக்கத்துடன் கையை உதறிவிட்டவள் வெளியே வந்து சுவானைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.உடம்பெல்லாம் நடுங்கியது.அப்போது சுவான் அழ ஆரம்பித்து விட்டான்.அவளைத் தொடர்ந்து சேகரும் வெளியே வந்தான்.அவளது இடுப்பிலிருந்த சுவானின் முதுகைத் தடவினான்.அதே கை அப்படியே பிரியாவின் முதுகுப்பகுதியை தழுவத் தொடங்கியது.சேகரின் நடவடிக்கைகளை வித்தியாசமாகத் தெரிய "அத்தான்" என்று கத்தினாள் அவள்.ஆமாம் நான் அத்தானே தான் தலையாட்டியவாறு இழிவாகச் சொன்னான் அவன்.

அவனது வாயிலிருந்த வந்த அற்ககோல் மணம் அவளது நாசியைத் துளைத்தது.அவளை பயம் கவ்வத் தொடங்கியது.சுவானுடன் மெதுவாக நகர்ந்து தனது றூமிற்குள் நுழைய முனைந்தாள்.
சேகர் அவளுக்கு முன்னான் அவளது அறைக்குள் புகுந்து கொண்டான்.கதவை இழுத்து மூடி சாவியையும் கையிலெடுத்தான்.
"ஏன் கதவை மூடுகிறீர்கள்?"அவளுக்கு நாக்குத் தழுதழுத்தது.
'தெரியல்ல உனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு"
'அதுக்கு' கலங்கினாள் அவள்.
அதுக்கு முதல் நீ எனக்கு வேணும்,ஒரேயொரு தடவை நீ வேணும் என்றவன் அவளைக் கட்டிப்பிடிக்க முனைந்தான்.அவனது கண்கள் சிவந்து ஒரு மிருகத்தனம் சுடர்விட்டது.
பிரியா என்று கத்தியவாறு அவளைத் துரத்தினான்.அக்கா என நடுக்கத்துடன் கதறினாள் அவள்.அப்போது வெளியில் ரெலிபோன் அலறியது.கதவைத் திறந்து வெளியேறியவன் மீண்டும் பூட்டிவிட்டு ரெலிபோனை தூக்கினாள்.
'என்னங்க நான் யாமினி கதைக்கிறன்.சாப்பிட்டீங்களா?"
மனைவி கேட்டாள்.
'இனித்தான் சாப்பிடப்போறன்'
என்றான் மெதுவாக 'பிரியா எங்க அவளை வரசொல்றியளா?"
அவளும் சுவானும் நல்ல நித்திரையிலிருக்கிறார்கள் எழுப்பி விடவா என்று கேட்டான்.
'இல்லை தேவையில்லை,இன்றைக்கு வெள்ளிகிழமை நான்வேலை முடிந்து வரும் போது அவளையும் சுவானையும் வெளிகிட்டு இருக்கச் சொல்லுங்கோ கோயிலுக்குப் போகவேணும்"
சரி என்று சேகர் ரெலிபோனை அடித்து வைத்தான்.
திரும்பவும் மிருகத்தனம் அவனுள் தீ போல் மூண்டது ஆவேசமாகத் கதவைத் திறந்து மீண்டும் மூடினான்.
உள்ளே சுவானை அணைத்தவாறு கட்டிலிருந்து அழுது கொண்டிருந்தாள் பிரியா.அவனைக் கண்டதும் சட்டென எழுந்து கொண்டாள்.
அவளை நெருங்கி இடுப்பிலிருந்து மகனைப் பறித்து கட்டிலில் எறிந்தான்.அந்தப் பிஞ்சு மூச்சு முட்ட அழத்தொடங்கியது.பிரியாவிற்கு மரண பயம் எழுந்தது.ஏன் என்னை இங்கே கூப்பிட்டனீங்கள்?அங்கேயே சாகவிட்டிருக்கலாமே.
தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.
இந்தக் கதறல்கள் ஒன்றும் அவனின் காதில் ஏறவில்லை முதலில் அவளை அடையவேண்டும் என்ற வேகம் தான் அவனுள் உக்கிரமானது.

ஒரே உந்தலில் பாய்ந்தவன் பிரியாவை பிடித்துக் கட்டிலில் தள்ளினான்.இனி இந்த மிருகத்திடமிருந்து தப்ப முடியாது என உணர்ந்த அவள்.ஒட்டு மொத்தமாக பலத்தை திரட்டி அவனைத் தள்ளினாள்.
எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் அப்பாவின் உயிரை பலிகொடுத்து அந்த இராணுவத்திடமிருந்து காத்தமானம்;பசுத்தோல் போர்த்திய இந்த மிருகத்திடம் இழப்பதா?கூடவே கூடாது.
நாட்டிலுள்ள இராணுவங்களை படைகொண்டு அழித்து சமாதனத்தை உருவாக்கினாலும் உருவாக்கலாமேயொழிய தஞ்சம் புகுந்த நாட்டில் இலை,மறைகாயாவுள்ள பகுதறிவற்ற இந்த மிருகங்களை அழிப்பதென்னவோ முடியாத காரியம் தான்.இருந்தும் இவர்களை இனங்கண்டு அழித்து என்னைப் போன்ற அபலைகளைக் காப்பதற்கு யாரேனும் முன்வரமாட்டர்களா?எனத் தனது மனதினுள் ஆதங்கத்தை நினைத்தவளுக்கு அந்த ஒன்பது மாடிக்கட்டிட அறையின் ஜன்னல் தான் கண் முன் தோன்றியது.ஒரே நிமிடத்தில் திறந்தாள்.

அக்கா........" என்ற கூச்சலுடன் வெளியே குதித்து கொண்டாள் பிரியா.


ஆக்கம்
களுவாஞ்சிக்குடி யோகன்



அப்ப நான் வரட்டா!!

May 16, 2008

நல்ல பகிடிதான் போங்க.....

ஜம்முபேபி ரொம்ப பிசியாக கொம்பியூட்டரில் இருந்தவேளை போன் ட்ரிங் ஆகிச்சு. அட யார்டா இந்த நேரத்துல என்று நினைச்சு உவர் சுண்டல் அண்ணா என்றால் நன்னா பேச்சு கொடுக்கணும் என்று வந்து போனை எடுத்தா அட அது நிலாக்கா...

அக்கா என்னமோ எனக்கு பொண்ணு செலக்ட் பண்ணிட்டாவாக்கும் என ஆசையாக ஆன்சர் பண்ணினா சொன்னா பாருங்க ஒரு மேட்டர்..........

நேக்கு கோவத்துக்கு பதில் சிரிப்பு தான் வந்திச்சு என்றா பாருங்கோவன். என்ன எல்லோரும் பேபியை அப்படி பார்க்கிறியள்.



அப்ப நான் வரட்டா!!

May 15, 2008

பன்னாட்டு அளவிலான வளர் தமிழ் மாநாடு..!!

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்)..


பன்னாட்டு அளவிலே, பாடுபட்டு உண்மையிலே தமிழை வளர்த்துக் கொண்டிருக்கும் நபர்கள், தமிழை வளர்க்க பாடுபடும் நபர்கள் இவர்களை இனம் கண்டு ஊக்குவித்து இவர்களை கெளரவிக்குமுகமாக மாபெரும் மாநாடு "புதுடெல்லி" பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிகிழமை (16/05/08) ஞாயிற்று கிழமையுமாக (18/05/08) இரு தினங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.

அவுஸ்ரெலியாவை பொறுத்தமட்டில் தமிழை பேச்சளவில் மட்டும் வளர்க்காமல் செயல் வடிவம் மூலமும் தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்களுடைய பட்டியலில் முதன்மையில் தெரிவு செய்யபட்டிருப்பவர் அவுஸ்ரெலிய இன்பதமிழ வானொலியின் பிரதான அறிவிப்பாளர் மற்றும் பணிப்பாளரான திரு.பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள்.













வெள்ளிக்கிழமை இரவு புதுடெல்லி பல்கலைகழகத்தில் நடைபெறவிருக்கும் "பன்னாட்டு அளவிளான வளர் தமிழ் மாநாட்டில்" திரு.பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் கெளரவிக்கபட இருக்கிறார்கள். இது அவுஸ்ரெலியா வாழ் தமிழர்களை பொறுத்தமட்டில் மிகவும் இனிப்பான ஒரு செய்தி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.



இவ்வேளையிள் அவரின் சேவை மென்மேலும் தொடரவேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்...(வாய் பேச்சில் மட்டுமின்றி தமிழை செயல் வடிவிலும் வளர்த்து கொண்டிருக்கும் பிரபா அண்ணாவிற்கு என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள்)..



பால(சிங்கம்)...ம்ம்ம் எப்பவும் சிங்கம் வந்து "சிங்கிள்"..தான்..!!



படம் பெறபட்ட மூலம் - (britishtamil.com)







அப்ப நான் வரட்டா!!

May 13, 2008

நிலா நிலா ஓடி வா

என்ன எல்லோரும் அப்படி பார்க்கிறியள்.
நான் தமிழ் பாடம் படிக்கிறேனாக்கும். அதுதான் பேபிக்கு மொண்டசூரில சொல்லி தந்த பாட்டு இப்ப நினைவுக்கு வந்திச்சு. அதுதான் பாடுறனாக்கும்.
நீங்களும் பாட போறியளோ.



அப்ப நான் வரட்டா!!

தமிழ் படியுங்கோ




அப்ப நான் வரட்டா!!

May 12, 2008

அன்னையர் தின வாழ்த்துக்கள்


அன்பிற்கு நிகரான அன்னையவளுக்கு வாழ்த்து சொல்ல ஒரு தினம் போதாது.. (தினம் தினம் அவளை வாழ்த்தலாம் இதயத்தில்)..அன்னையர் தினமான இன்று லோகத்தில் இருக்கும் அன்னையவளுக்கு எல்லாம் ஜம்மு பேபியின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்..

என்ட மம்மிக்கும்..(அம்மாவிற்கும்)..இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..நினைத்து பார்த்தால் அம்மாவிடம் அடி வாங்குவது கூட ஒரு சுகம் தான் ஏனேனில் அடித்த மறுகணே அணைக்கும் கை இந்த உலகத்தில் தாயின் அன்பு கை மட்டுமே..

அந்த அன்பு கரங்களுக்கு என் இனிய அன்பினை முத்தமாக வெளிபடுத்தி இனிய அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி..(சோ ஹப்பி).. ம்ம்..அதோட யாழ்களத்தில் இருக்கிற அன்னையர்களுக்கும் எனி அன்னை ஆக போறவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எனி அன்னை ஆக போறவைக்கு இப்பவே என்ட "அட்வான்ஸ்" வாழ்த்துக்கள்.. (அப்படியே நேக்கு வர போறவாவிற்கும் என்ட அன்னையர் தின வாழ்த்துக்கள்)..என்ன பார்க்கிறியள் வர போறாவிற்கு இப்பவே வாழ்த்து தெரிவிப்பதில பிழையே இல்லை பாருங்கோ..


அன்னையில் அன்பில்
அன்னையின் அரவணைப்பில்
அன்னையின் அன்னத்தில்
அன்னப் பறவைகளானோம்..

அடிக்கும் கைகள்
அகிலத்தில் பல
அடித்து விட்டும்
அணைக்கும் கை
அன்னையவள் கை மட்டுமே..

அந்த அன்னையவளின்
அன்பு கை என் வாழ்க்கை
பயணத்தில் என்றும்
வேண்டும் அம்மா..



இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... அனைத்து அன்னையர்களுக்குமாக எனது தெரிவில்...(நேக்கு ரொம்ப பிடித்த பாட்டு)..ஒரு பாட்டு ஓ நீங்களும் கேட்டு பாருங்கோ ..





அப்ப நான் வரட்டா!!