June 28, 2008

கால்கள் பேசினால்..!!


கதிரவன் மெத்த மெத்தாக சினத்தை தணிக்கும் அந்த பொழுதினில்..பல காலடி சப்தங்கள்..ஒவ்வொரு கால்களும் ஏதோவோர் எதிர்பார்பில் சென்று கொண்டிருக்க..ஒவ்வொரு கால்களை போலவே இந்த கால்களும் பயணிக்கிறது அந்த பொழுதினில்..

அன்றைய பொழுதின் சுமையை இறக்கிய சந்தோசத்தில் அந்த கால்கள் சற்று அதிகமாகவே ஆரவாரமிட்ட வண்ணம் சென்று கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக இன்னொரு கால் இந்த காலுடன் எதிர்பாராத தருணத்தில் மோதி விடுகிறது ..மனங்கள் மட்டுமா ஊடல் கொள்ள வேண்டும் ஏன் கால்கள் கொள்ள கூடாதா.?

ம்ம்..மோதிய கால் கன்னி(யின்) கால்கள் இந்த கால் பட்டவுடனே அந்த முரட்டுகால் மிதுவானது..கன்னி காலின் நாணம் தனை புரிந்த முரட்டுகால் மெதுவாக புன்னகைத்தது..கன்னி கால் மெதுவாக மன்னிப்பு என்றது அங்கே ஆரவாரமிட்ட பல கால்களின் ஓசையில் இந்த கன்னி காலின் சப்தம் புரியுமா என்ன..

இதே சமயம் இந்த கால்களை இன்னோர் உறவு கால் சந்தித்து விட..அந்த கால் தன் நடையின் வேகத்தை குறைத்து தன் வேலை தனை மறந்து இந்த சிந்தனையில் ஓராயிரம் கற்பனை கொள்கிறது..உடனே இந்த உறவு கால் அந்த கால்களை பார்த்து "கா(த)ல்" என்று கால் நீட்ட....

நீட்டிய கால் தேவை அற்ற சுமையை தன்னகத்தே கொண்டதால் காலின் கணம் அதிகரிக்க அந்த கால் மெதுவாக வலிக்க தொடங்க அதையும் தாங்கிய வண்ணம் "நொண்டி நொண்டி" நடந்து..

நொண்டிய கால்கள் தன் உறவு காலை நோக்கி சென்றது..அங்கே சென்ற கால்கள் முழுவதும் சிரிப்புடன் நலம் விசாரித்து தன் அன்பை காட்டி விட்டு எதுவும் தெரியாது போல வலியுடன் மெல்ல நடை போட்டது..போக போக இந்த காலில் வலி கூடியது ஏனேனின் காலில் தேவையற்ற கணம்...

ஆனால் மற்றைய கால்கள் மன்னிப்பை பரிமாறிவிட்டு சென்றுவிட்டது...(அந்த கால்கள் வழமையை விட வேகமாகவே நடந்தன ஏனேனில் அந்த கால்களின் கணம் இல்லை)..

ஆனால் சில கால்கள் தேவையற்ற கணங்களை தன்னகத்தே கொள்வதுடன்..அன்பையும் பரிமாற எப்படி தான் இந்த போலி நொண்டி கால்களாள் முடிகிறதோ தெரியவில்லை...இந்த விடை தெரியாத கேள்விக்கு விடையை யோசித்த வண்ணம் என் கால்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்தது...




அப்ப நான் வரட்டா!!



June 19, 2008

விழியும் மலரும்..!!


மலர்ந்த அந்த பொழுதினில்
வீசிய இதமான தென்றலில்
மலர்களின் மெல்லிசை
கேட்டு மலர்ந்தது என்
விழி...

மலர்ந்த விழி
மொட்டுடைந்த
அந்த மலரின்
மெல்லிசை வந்த
திசையினை
தேடின..!!

தேடிய அந்த விழியில்
விழுந்ததோ பல மலர்கள்
வாடின விழிகள்..

பூத்திருந்த மலர்களை
பார்த்தும்..

மலர்கள் ஒவ்வொன்றினதும்
இதமான சிரிப்பு
விழிகளிள்
விழுந்த
போதும்..!!

விழிகள் அதனை
ரசிக்கவில்லை..

வீசிய தென்றலில்
மலர்கள் தலையசைத்து
விழியிடம்..

பேசின பல
கதைகள்..
ஆனால்
விழியோ
மெளனம்..!!

விழியின் ஏக்கம்
அறியுமா
மலர்கள்..

மலரின் குணம்
அறியுமா
விழிகள்..

மலரில் தேன் அருந்த
தேனிக்கள் மெதுவாக
குத்த..!!

மலருக்கு வலித்ததோ
தெரியவில்லை
ஆனால்

விழியில் இருந்து
வடிந்தது கண்ணீர்..

அந்த கண்ணீர் துளி
விழுந்தது ஒரு மலரின்
மேல்..

அந்த துளிபட்டு
மலர் சிரிந்தது
விழி வியந்தது..!!

விழி மலர்ந்தது
தான் தேடிய
மலரை விழியால்
நுகர்ந்ததில்..

விழி மலருக்கே
பரிசளித்தது ஒரு
மலரை..

பல கதைகள் பேசியது
விழி..
மலரோ மெளனம்..!!

மலர் மெளனித்த வேளை
விழி தன் விழியால்
விளித்தது
தன்
காதல்..

விழியின் காதல் சொற்
கேட்டு.
மலர் தலை குனிந்தது தான்
ஏனோ..

விழி மூட முடியாமல்
விழி தவிர்க்க..

மனம் பேசியது
உன் மலரை போல
தான்..

என் மனதில்
இருக்கும்
மலரவளும்
என..

இதை கேட்ட
விழி.

மெதுவாக
தன் இமைகளை
மூடி
கொண்டது..!!





அப்ப நான் வரட்டா!!

June 14, 2008

செல்லபிராணி!!


எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..அட மறுபடி வந்துட்டானே எண்டு பார்க்கிறது விளங்குது..(உது நன்னா இல்ல சொல்லிட்டன்)..சரி எனி ஒவ்வொருவரா அடிபடாம எண்ட புகைவண்டியிற்குள் உட்பிரவேசியுங்கோ பார்போம்..

எல்லாரும் ஏறீட்டீங்களோ..

ம்ம்..எனி நாங்கள் பயணத்தை ஆரம்பிப்போம் என்ன..(அது சரி எல்லாரும் "டிக்கட்" எடுத்தனியளோ)..எடுக்காதா ஆட்கள் எடுக்க வேண்டும் என்ன..சரி புகைவண்டி பயணத்தை ஆரம்பிக்க போது..அட அதுக்கு முதல் ஒண்ணு சொல்லனுமே அது தான் "ஜம் சிந்தனை"..

"காக்கா கரையும்
நாய் குரைக்கும்
நாம இரண்டு செய்வோம்"

அட..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(அச்சோ அது சிந்தனை மட்டும் தான்)..சரி நாம புகைவண்டியை எடுப்போம்..கூ கூ குச்சு கூ கூ கூ குச்சு கூ கூ கூ...ம்ம் புகை வண்டி ஆரம்பித்து விட்டது பயணத்த..

சரி புகை வண்டியில பயணம் செய்யும் வர நான் சொல்ல வந்ததை சொல்லுறன் என்ன..இப்படி தான் அன்னைக்கு நான் எண்ட நண்பனின்ட வீட்ட போயிருந்தனான் பாருங்கோ அங்க நாயை கண்டதும் நான் பயந்து போயிட்டன் அல்லோ பிறகு என்ன கண்டு நாய் பயந்து போனது வேற விசயம்..

அங்க பார்த்தா நாயிற்கு ராஜ மரியாதை..எண்ட நண்பனின்ட அப்பா வந்து எப்படிடா தம்பி இருக்கிறார் எண்டு கேட்க நான் என்ன கேட்கிறார் எண்டு போட்டு நல்லா இருக்கிறன் அங்கிள் எண்டு சொல்ல..(அங்க பார்த்தா அவர் நாயை பார்த்து கேட்டிருக்கிறார்)..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் இது எல்லாம் சகஜம் தானே நம்ம வாழ்க்கையில பாருங்கோ..

அதுக்கு பிறகு தான் அவர் என்ன விசாரித்தவர் எப்படி சுகம் எண்டு நானும் தலையை ஆட்டினது தான்..அவர் சொன்னார் "ஜீலியும்" எனக்கு ஒரு பிள்ள மாதிரி தான் எண்டு..(நான் உது யாரப்பா "ஜீலி" எண்டு யோசித்தா)..பிறகு தான் விசயம் விளங்கிச்சு "ஜீலி" எண்டது நாயின்ட பெயர்..(நன்ன விசயம் தான்)..

அங்க அந்த நாயிற்கு கிடைத்த ராஜ மரியாதையை பார்த்து..(எண்ட மனசில சா சா பேசாமா நானும் நாயா பிறந்திருக்கலாம் எண்டு யோசித்தனான் எண்டா பாருங்கோவன்)..உடனே மணகண்ணில ஊரில நாயிற்கு கல்லால அடிக்கிற படம் காச்சி ஏற எண்ட ஆசை இறங்கிட்டு..

ஒரு மாதிரி அவையின்ட் வீட்ட இருந்து விடை பெற்று வந்தாலும்..(அந்த நாயே எண்ட கண் முன்ன வந்து கொண்டு இருந்தது எண்டா பாருங்கோவன்)..ஏதோ முற்பிறப்பு தொடப்பு இருக்கு போல சரி அதவிடுவோம் பாருங்கோ..இப்படியே அந்த நாய யோசித்து கொண்டு இருக்கும் போது..

எனக்கு எண்ட பழைய நினைவுகள் ஞாபகதிற்கு வர தொடங்கின..(ம்ம்..தமிழ் படத்தில சொல்லுவீனம் "பிளாஸ்பக்" எண்டு அதே தான்)..


5
4
3
2
1


என்ன பார்க்கிறியள்..(எனி நாங்கள் பின்நோக்கி பயணிக்க போறோம் அது தான் உப்படி)..

முந்தி உப்படி தான் இருந்தா போல நேக்கு ஏதாச்சும் செல்லபிராணி வளர்கணும் எண்ட ஆசை வந்திட்டு..(அது ஏன் வந்தது எண்டு யோசித்தனான் இப்ப ஆனா ஞாபகம் வருதில்ல)..உடன அம்மாவிட்ட கேட்டனான் எனக்கு ஒரு செல்லபிராணி வாங்கி தாங்கோ எண்டு..(அம்மா சொன்னவா நீ வீட்ட குப்பையாக்கிறது காணாது எண்டு உனக்கு செல்லபிராணி வேறையா எண்டு)..

நானும் விடல்ல அடம்பிடித்து பார்த்தனான் ஆனா கடசியா தோத்து போயிட்டன்..(கடசி ஆயுதமா சாப்பிடமாட்டன் எண்டு சொல்லியும் பார்த்தனான் ஆனா அதுவும் பலிக்கவில்ல)..பிறகு என்ன சாப்பிட்டது தான் என்ன பார்க்கிறியள் என்னால பசி எல்லாம் தாங்க ஏலாது அல்லோ..

ம்ம்..அம்மா ஏலாது எண்டு சொல்லிட்டா எனி என்ன செய்வொம் எண்டு யோசித்து கொண்டு கவலையா கிடந்தா மச்சாள் வந்தவள் அவளிட்ட நடந்தத சொல்ல..(அவளும் யோசித்து போட்டு)..ஒன்னு செய்வோமா அங்கால இருக்கிற புற்களிற்குள்ள "வெட்டு கிளி" வாறது பிடிப்போமா எண்டு..

முதலில எனக்கு உந்த யோசனை நன்னதா இருகாட்டியும் பிறகு ஒன்னை வளர்த்தா காணும் தானே எண்டு போட்டு..அவள் கூட சேர்ந்து ஒரு நாலும்,ஜந்து வெட்டுகிளி பிடித்தனான் எண்டு நினைக்கிறன் வடிவா ஞாபகமில்ல பாருங்கோ..

அத ஒரு "ஜாம்" போத்தலில போட்டு மூடி..(அப்படியே மூடியில்ல துவாரம் போட்டு)..வீட்ட கொண்டு வந்து எண்ட அறைகுள்ள வைத்தா பிறகு தான் எனக்கு நிம்மதி..(அதையே பார்த்து ரசித்து கொண்டு இருந்தனான் பாருங்கோ)..அப்ப எண்ட பாட்டி உதை பார்த்து போட்டு..

உது என்னடாப்பு எண்டு கேட்க நானும் வெட்டுகிளி எண்டு சொல்ல..(அவா சொல்லிட்டா உதை பிடிக்கிறது பாவம் அதை பிடிக்கு போது அது கும்பிடுறதாம் எண்டு)..உடன நான் சொன்னேன் நான் அத வளர்க்க போறன் எண்டு இல்ல அப்படி எல்லாம் செய்ய கூடாது போய் விடு எண்டு சொல்ல..

உது தான் சாட்டு எண்டு பாட்டியிட்ட நான் இதை விடுறன் எனக்கு வளர்க்க ஏதாச்சு வாங்கி தருவியளா எண்டு கேட்க அம்மா ஓமேண்டா வாங்கி தாறேன் எண்டு சொல்லி போட்டா..(உடனா எனக்கு ஒரு யோசனை வர பாட்டிக்கு நல்ல பிள்ளை எண்டு காட்டுறதிற்காக அத கொண்டு போய் விட்டனான் பாருங்கோ)..

பிறகு அம்மாவை போய் நச்சரித்து பார்த்தனான் அம்மா அசையிற மாதிரி தெரியல்ல..(உது என்னடா பிடித்த வெட்டுகிளியையும் விட்டாச்சு எண்டு ஒரே கவலை)..என்ன செய்யிறது எண்டு யோசித்து கொண்டு இருந்தனான் பாருங்கோ கொஞ்சகாலமா..

உப்படியே என்ட ஆசை வழமையா இரண்டு நாள் ஆசை தான் ஆனபடியா மறந்து போய் கொண்டிருக்கும் போது எண்ட நண்பன் சொன்னான் அங்க ஒரு வாய்கால் இருக்கு அங்க மீன் இருக்கு பிடிப்போம் வாறியா எண்டு..(உடனா எண்ட மனசில பழைய ஆசை பூத்திட்டுது)..

ஓம்டா வாரேன் எண்டு போட்டு அங்க போனது தான்..(அடு ஊத்த தண்ணி போற வாய்கால்)..அத பார்த்து போட்டு உதுகுள்ள இறங்கனுமா எண்டு வேற யோசனை வந்திடுச்சு பாருங்கோ..ஆனா எண்ட நண்பன் இறங்கி பிடிக்க தொடங்கிட்டா முதலில நான் பார்த்து கொண்டு தான் இருந்தனான் அவன் கொஞ்ச மீன்களை பிடிக்க நானும் இறங்கி பிடிக்க தொடங்கினான்..முதலில அதுகுள்ள பிடிக்க ஒரு மாதிரியா தான் இருந்துச்சு பிறகு பழகி போச்சு...

நானும் கொஞ்ச மீன் பிடித்த சந்தோசத்தில வீட்ட போனான் அல்லோ..(அங்க அம்மா உத பார்த்து போட்டு உது என்னடா எண்டு கேட்க)..உடன யோசித்தேன் வாய்காலில இறங்கி மீன் பிடித்தனான் எண்டு சொன்னா கண்டிப்பா ஏச்சு விழும் எண்டு போட்டு நண்பன் தந்தவன் எண்டு பொய் சொல்லிட்டன்..(அட என்ன பார்க்கிறியள் ஜம்மு பேபி பொய் எல்லாம் சொல்லுது எண்டோ ஆபதிற்கு பொய் சொல்லுறது பாவம் இல்ல எண்டு பெரியவை சொல்லி இருக்கீனம் பாருங்கோ)...

அம்மாவும் உவனோட நான் படுறபாடு எண்டு கொண்டு போக நானும் சந்தோசமா மீனை கொண்டு "பாத்ரூம்" போனான் அல்லோ அங்க போய் நல்ல தண்ணி மாத்தி ஒரு போத்தலில தான் மீனையும் விட்டனான் பாருங்கோ..(அங்கையும் எண்ட அம்மா வந்து உங்க "பாத்ரூமை நாசமாக்காதே)..போய் உன்ட அறைகுள்ளையே வை எண்டு..

சரி எண்டு போட்டு கொண்டு போய் வைத்து சந்தோசமா அதோட பொழுது போக்கி கொண்டு இருந்தா...அப்பா வந்து பார்த்து போட்டு சொன்னார் உது மீன் இல்லடா வால்பேத்தை எண்டு நான் இல்ல உது மீன் தான் எண்டு அப்பா கூட சண்டை போட அவருக்கு கோபம் வந்து ஒன்னும் கதைக்காமலே போயிட்டா..(இப்ப நினைக்க சிரிப்பா இருக்கு எனக்கு)..

பிறகு எனக்கு சந்தேகம் வந்திட்டுது போய் பாட்டிட்டா கேட்டா அவாவும் "வால்பேத்தை" எண்டு சொல்ல சா போயும் போயும் வால்பேத்தையா பிடித்தோம் எண்டு போட்டு அதை கொண்டு போய் "காணுகுள்ள" விட்டு போட்டு எனி ஒன்னும் வளர்க்கிறதில்ல எண்ட முடிவிற்கு வந்துட்டன்..

இப்படியே நாட்கள் போச்சு..(நானும் உதுகள பத்தி மறந்தே போனேன்)...

உப்படியே நாட்கள் போய் கொண்டிக்கும் போது ஒருத்தர் எங்கன் வீட்ட வந்தவர் ..(ஊரில பக்கத்து வீடாம்)..எனக்கு யாரேண்டும் தெரியா அவர் நேக்கு கோழிகுஞ்சு தந்தவர் அல்லோ..

எனக்கு சரியான சந்தோஷம் பாருங்கோ..(வழமை போலவே அம்மா சொல்லிட்ட உண்ட அறைகுள்ளையே போய் வைத்து கொள்)..எனக்கு என்ன நான் போய் பத்திரமா வைத்திருந்தது தான் இருந்து போட்டு வெளியாள விடுறனான் ஒருக்கா எண்ட இரண்டு கோழியை குஞ்சை மரணாய் கொண்டு போயிட்டு..எனக்கு சரியான துக்கம் தான் என்ன செய்யிறது எண்டு மிச்சத்தை கவனமா வைத்திருந்தனான் அல்லோ..

ஆனா என்ன அதில ஒன்னை எலி கடித்து போட்டுது..(கொஞ்ச நாளையாள மற்ற கோழி குஞ்சுகளும் செத்திட்டுது அல்லோ)..என்னடா உப்படி ஆகிச்சு எண்டு நேக்கு கவலை ஆசையா வளர்த்த கோழி குஞ்சு உப்படி ஆகினா கவலை தானே பாருங்கோ..

கொஞ்ச காலதிற்கு கோழிகுஞ்சு ஞாபகம் இருந்துச்சு பிறகு அதுவும் மறந்து போச்சு நேக்கு..பிறகு வழமை மாதிரி தான் நம்மன்டபாடு..

இருந்தா போல ஒரு நாள் பாடசாலை விட்டு வரக்க வீதியில ஒரு நாய்குட்டி..(பார்க்க பாவமா இருந்துச்சு அல்லோ)..நானும் தூக்கி கொண்டு வந்துட்டன் பாருங்கோ வீட்ட உதை எப்படி கொண்டு போறது எண்டு யோசித்து கொண்டு ஒரு மாதிரி வீட்டிகுள்ள நுழைந்தா..

வழமை போலவே அம்மாட்ட இருந்து..(ஜயர் உச்சரிக்கிற மந்திரம் மாதிரி)..நன்னா ஏச்சு விழுந்துச்சு பாருங்கோ..சரி ஏசி போட்டு விட்டிடுவா எண்டு பார்த்தா பத்தாதிற்கு அன்னைக்கு அப்பா வேற வேலைக்கு போகல்ல அவர் உதை பார்த்து போட்டு என்னும் ஏச்சு போய் விட்டிட்டு வா எண்டு..

நான் நன்னா விட்டன் நான் வரக்க நாயிற்கு பெயரும் வைத்து கொண்டு வந்தனான் போய் விடவே..நான் இல்ல வளர்ப்பன் எண்டு கத்த அப்பா ஏச்சி போட்டார் எனக்கு..(எனக்கு அழுகை அழுகையா வந்திடுச்சு)..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் அப்ப நான் சின்னபிள்ள தானே இப்ப எண்டா அழுகை எல்லாம் வராது அல்லோ..நான் அழ அம்மாவும் அழாதேடா எண்டு என்ன தேற்ற..(நான் நினைத்த ஒரு மாதிரி நாய் குட்டியை காப்பாத்தி போடலாம் எண்டு ஆனா முடியல்ல)..

அப்பா கொண்டு போய் நாயை விட்டிட்டு வந்துட்டார் அல்லோ..(நான் அன்னைக்கு சாப்பிடமாட்டன் எண்டு வீட்ட உண்ணா விரதம்)..ஆனா என்னால பசி எல்லாம் தாங்க ஏலாது அல்லோ இரண்டு வீடு தள்ளி போனா பெரியம்மாவின்ட வீடு அங்க போய் சாப்பிட்டுவிட்டு வந்திட்டு சாப்பிடாத மாதிரி இருந்தனான் அல்லோ..

கொஞ்சத்தால அப்பா வந்து சாப்பிட வா எண்டு சாப்பாடு கொண்டு வந்தவர் நான் மாட்டன் எண்டு அடம்பிடிக்க அவர் இப்படியே இரு எண்டு போயிட்டார்..எனக்கு என்ன நான் தானே சாப்பிட்டாச்சு இருந்தனான் அல்லோ,ஆனா அம்மா வந்து சாப்பிடு ராசா எண்டு சொன்னது இன்னைக்கு எனக்கு ஞாபகம் இருக்கு..

நான் மாட்டன் எண்டு சொல்ல..சாப்பிடு நாளைக்கு மீன் வாங்கி வளர்க்க விடுறன் எண்டு அம்மா சொல்ல..(உடனா நம்மளிற்கு மனசு கொஞ்சம் மாற தொடங்கிச்சு)..உண்மையா வாங்கி தருவீங்களா எண்டு கேட்டு போட்டு..சொன்னேன் நான் பெரியம்மா வீட்டு சாப்பிட்டாச்சு எண்டு..

பிறகு அந்த கிழமை முடிய அம்மா மீன் தொட்டியும் வடிவான மீன்களும் வாங்கி தந்தா எனி நல்ல பிள்ளையா இருகனும் எண்டு சொல்ல..(வடிவா தலை ஆட்டுவோம் தானே)..நானும் மீன் தொட்டியில தண்ணியை போட்டு மீனை விட்டனான் அல்லோ காலம எழும்பி பார்க்க எல்லாம் மீனும் செத்து போய் கிடந்துச்சு ஏன் எண்டு விளங்கள்ள..(பிறகு அப்பா தான் சொன்னார் குளோரின் தண்ணியில விட்டிருப்பாய் அது தான் எண்டு)..

சா..இப்படி ஆகிச்சே எண்டு மறுபடி அம்மாவிட்ட போய் மீன் வாங்கி தர ஆக்கினை கொடுக்க முன்னம் அப்பா அன்னைக்கு கொஞ்ச மீன் வாங்கி கொண்டு வந்து தந்திட்டார்..பிறகு அந்த மீன்களை குளோரின் தண்ணியில போடாம வடிவா பார்த்து வந்தனான்..

இடைகிடை பாட்டியிட்ட போய் மீன் வாங்கி தற சொல்லி கேட்கிறது..(அவா கட்டாயம் வாங்கி தருவா அல்லோ)..உப்படி நிறைய மீன் சேர்ந்துட்டுது இப்ப நேக்கு சரியான சந்தோசம் கிட்டதட்ட ஒரு மாசம் வளர்த்திருப்பம் அல்லோ..

அதுகுபுறம் வழமை போலவே நேக்கு அலுத்து போச்சுது மீன் வளர்க்கவும்..(பிறகு என்ன செய்யிறனான் எண்டா)..மீன் பிடிக்கிற சின்ன வலை இருந்துச்சு அதால எல்லாம் மீனையும் பிடித்து பிடித்து விளையாடுறது ..அப்படி விளையாடி விளையாடி எல்லா மீன்களும் செத்து போச்சு..

உந்த முறை அம்மாட்ட வாங்கி தற சொல்லி கேட்கல ஏன் எண்டா எனக்கு அலுத்து போச்சு தானே..ஆனபடியா பேசாம இருந்திட்டன் அல்லோ..

அதுக்கு பிறகு கொஞ்சகாலத்தால எண்ட நண்பன் ஒருவனின்ட ஓட்டில இருந்து அணில் குஞ்சுகள் இரண்டு விழுந்ததாம் ஒன்றை நீ வைத்து கொள் எண்டு தந்தான்..(திருப்பி எனக்கு அணில் வளர்க்க ஆசை வந்துச்சு)..அத வீட்ட கொண்டு போனா ஒருத்தரும் ஒன்னும் சொல்லல்ல அல்லோ..

நேக்கும் சரியான சந்தோஷம் அணில் குஞ்சை வளர்க்க தொடங்கினேன் வடிவா தான் எல்லா பார்த்து வளர்த்தனான் பாருங்கோ ஆனா என்ன அத பூனை கொண்டு போயிட்டு அல்லோ..(என்ன பார்க்கிறியள் நான் என்ன செய்ய பாருங்கோ நான் வளர்க்கிற ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்று ஆகுது நான் என்ன செய்ய)..

உதுக்கு பிறகு ஒன்னுமே வளர்க்கிறதில்ல எண்ட முடிவிற்கு வந்தாலும்..நான் சும்மா இருந்தாலும் என்ன விடமாட்டன் எண்ட மாதிரி குருவி ஒன்னு..(பிறகு யாழ்கள குருவியை நினைக்கிறதில்ல சொல்லிட்டன்)..அடிபட்டு றோட்டில கிடந்துச்சு அல்லோ..அத பார்த்தவுடன எனக்கு பாவமா இருந்துச்சு மறுபடி அதையும் எடுத்து கொண்டு வீட்ட போனனான் அல்லோ..

வீட்ட போய் அதுக்கு நானே எண்ட கையால வைத்தியம் பாத்து..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..ஏன் நாம் பார்க்க கூடாதா என்ன..அதுன்ட நல்ல காலம் போல நான் பார்த்த வைத்தியத்தில அந்த குருவி பிழைத்து போச்சு ஆனா குருவி வளர்க்க கூடு தேவை அல்லோ..(உதை எப்படி வாங்கிறது எண்டு யோசித்து கொண்டிருக்கையில)..

எண்ட அம்மா சொன்னா அது பாவம்டா விட்டிடு எண்டு நான் நல்ல விட்டன் பாருங்கோ..உடன அம்மா சொன்னவா இப்ப சிறையில இருக்கீனமே அவை எல்லாம் முந்தி குருவிகளை எல்லாம் இப்படி கூட்டுகுள்ள வைத்து துன்புறுத்திய ஆட்கள் எண்டு..(உந்த கதையை கேட்டவுடன் நேக்கு பயம் வந்திட்டுது ஒரு பக்கம்)..ஆனாலு இல்ல வளர்ப்ப எண்டு தான் இருந்தனான் அல்லோ...

பிறகு யோசித்து பார்த்தன் பறக்கிறதை நாம அடைத்து வைக்கிறது சரியில்ல சுகமாகினவுடன பறக்கவிடலாம் எண்டு அந்த குருவிக்கு சுகமாகின பிறகு அதையும் பறக்கவிட்டிட்டன் அல்லோ..இப்படியே சொல்லி கொண்டு போகலாம் பாருங்கோ கடசியா இன்னொன்ற மட்டும் சொல்லுறன்..

அது தான் ஆமை பாருங்கோ அங்க ஒரு குளத்தில பிடித்தனாங்க நண்பனோட சேர்ந்து..(உத வீட்ட கொண்டு போனா)..அம்மா கத்த தொடங்கிட்டா "ஆமை" வந்த வீடு விளங்கின மாதிரி தான் எண்டு எனக்கு தெரியுமோ உது எல்லாம்..

அப்பவே விளங்கிச்சு உத வீட்டிற்குள்ள வைத்திருக்க முடியாது எண்டு போட்டு நண்பனிற்கு போன் பண்ணிணா அவன் சொன்னான் தனக்கு வீட்ட ஏச்சு விழுது எண்டு..(அப்ப நேக்கு சரியான சந்தோஷம் பாருங்கோ அவனுக்கும் ஏச்சு விழுது வீட்ட எண்டு)..என்ன பார்க்கிறியள் . .

பிறகு என்ன வழமை போலவே அதையும் விட்டது தான் பாருங்கோ. உதுக்கு பிறகு நான் கொஞ்ச நாள் வளர்த்த என் செல்லபிராணிகள்..

1)முயல்
2)ஒணான்
3)பூனை.

இப்படி சிலதுகள் எண்டா பாருங்கோ..(என்னொன்டும் நேக்கு வளர்க்க ஆசையா தான் இருந்தது ஆனா எண்ட இனத்தை நானே எப்படி வளர்க்கிறது எண்டு போட்டு வளர்க்கல்ல என்னது எண்டு பார்க்கிறியளோ அது தான் குரங்கு)..

இப்படியே நான் பழச யோசித்து கொண்டிருக்கும் போது..(எண்ட பக்கத்து வீட்டு நாய் குரைக்க)..மறுபடி நினைவிற்கு வந்துட்டன்..


1
2
3
4
5


என்ன பார்க்கிறியள் எனி "பிளாஸ்பக்" முடிந்து..முன் நோக்கிய பயணம் பாருங்கோ..

அட...புகை வண்டியில எல்லாரும் நித்தவா போயிட்டீனம்..(அப்ப நான் சொன்னத ஒருத்தரும் கேட்கலையோ)..சரி நாங்கள் இறங்க வேண்டிய புகையிரதநிலையம் இன்னும் இரண்டு நிமிசத்தில் வர இருக்கிறது..அதுக்கு முதல் நீங்களும் என்ன மாதிரி "செல்ல பிராணிகள்" வளர்த்தனியளோ உங்கள் சிறு பிராயத்தில..

ஒருக்கா சொல்லுங்கோவேன்..(இப்பவும் வளர்க்கிறியளோ நான் இப்ப ஒன்னும் வளர்க்கிறதில்ல அல்லோ)..

ம்ம்..தற்போது நாங்கள் இறங்க வேண்டிய இடதிற்கு வந்துள்ளோம்..(ஒருத்தரை ஒருத்தர் தள்ளி விழுத்தாமா இறங்குங்கோ பார்போம்)..இன்னொரு புகையிரத பயணத்தில சந்திபோம் என்ன..





அப்ப நான் வரட்டா!!

June 07, 2008

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!


எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது..

அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா..

"வானம் மேல
பூமி கீழ
நாம யாழில"

இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேரா விசயதிற்குள்ள வாரன்..

நான் இருக்கிற நாடு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே..ஓ..தெரியாதவைக்காக மறுபடி சொல்லுறன் என்ன..(நான் இருக்கிறது அவுஸ்ரெலியாவில)..உவனை எல்லாம் அந்த நாட்டிற்குள்ள எப்படி அனுமதித்தாங்க என்டு நீங்க மனசிற்குள்ள நினைக்கிறது விளங்குது..(எனக்கும் கன நாளா அந்த சந்தேகம் இருக்கு தான்)..சரி அத விடுவோம் பாருங்கோ..

எங்கன்ட ஆட்கள் இருக்கீனம் தானே அவுஸ்ரெலியா இருக்கிற வெள்ளைகள் வலு மோசம் என்டு எல்லாம் சொல்லுவீனம் நானும் உங்க வர முந்தி அப்படி தான் நினைத்து கொண்டு இருந்தனான் பாருங்கோ..(பிறகு உங்க வந்து பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு அவையள் நல்ல ஆட்கள்)..தாங்களும் தங்கன்டபாடும், எங்களுக்கு அப்படி இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தானே பாருங்கோ.. (டிரெயினில ஏறினா கடசி பெட்டியில இருக்கிற ஆளிற்கு கேட்கிற மாதிரி "வள வள" என்டு கதைத்தா)..அவன் ஒரு மாதிரி பார்க்கமலா போவான்..??

பிறகு சொல்லுறது அவன் இப்படி பார்த்துபோட்டு போறான் உவங்க இப்படி தான் என்டு எல்லாம்..உது சிட்னி "டமிழ்சின்" வழமையான பல்லவி...

அட நான் ஏதோ ஒன்னை கதைக்க வந்துபோட்டு எங்கையோ கதைத்து கொண்டு போயிட்டன் பாருங்கோ...(அது சரி இன்னைக்கு நான் என்னத்தை பத்தி கதைக்க வந்தனான்)..ஓ..ஞாபகம் வந்திட்டு..

அதாவது உங்க இருக்கிற "வெள்ளைகள்" இருக்கீனம் தானே அவையள் தங்கன்ட உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ கண்டால்..(நடுறோட்டில)..என்டாலு��
�் முத்தத்தால் தங்கன்ட அன்பை பரிமாறி கொள்வார்கள்..உங்க வந்த புதிசில எனக்கு எல்லாம் ஒரு மாதிரி இருந்தது ஏன் என்டா இரண்டு வெள்ளை..(நண்பிகள்)..நடுறோட்டில சந்தித்த உடன கட்டி பிடித்து "முத்தம்" மூலம் தங்கன்ட அன்பை பரிமாறி கொள்வீனம் பாருங்கோ..(பார்க்கிற எங்களுக்கு அன்பை பரிமாறுற மாதிரியாக இருக்கும்)..அட நான் சொன்னது வந்த புதிசில பாருங்கோ..

சரி..சரி நீங்க முறைத்து பார்க்கிறது விளங்குது..(அட இது எல்லாம் சகஜமப்பா)..உதை விட யூனி மற்றும் வேலை ஸ்தலங்களிளும் உவ்வாறு தங்கள் அன்பை சக ஊழியர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ பரிமாற்றி கொள்வார்கள்..(வேலை ஸ்தலங்களை விட யூனியில தான் கூடுதலாக உவ்வாறு நடக்கும் பாருங்கோ)..

நீங்கள் இருக்கிற நாடுகளிளையும் உப்படி நடக்கும் என்டு நினைக்கிறன் பாருங்கோ..(எல்லா நாட்டையும் சொல்லவில்லை பாருங்கோ)..

ஓ..உப்படி உவையள் அன்பை பரிமாற்றி கொள்வீனம் பாருங்கோ..(ஆனா நாம உதை எல்லாம் அன்பா பார்போமா என்ன பார்க்கிறியள்??)..எனக்கு கூட ஒரு ஆசை இருந்தது தான் முந்தி யாரும் என் கூடவும் அன்பை பரிமாறமாட்டீனமா என்டு..எனக்கு மட்டுமில்ல என்ன மாதிரி கனபேருக்கு இருந்தது அவையள் எல்லாம் உண்மையை சொல்லமாட்டீனம் நாம சொல்லுவோமல..

போக..போக நேக்கும் எல்லாம் பழகிச்சு..(அச்சோ நான் சொன்ன பழகிச்சு வந்து மற்றவை அன்பை பரிமாறுறதை பார்த்து என்டு சொல்ல வந்தனான் பாருங்கோ)..பிறகு நாமளும் "யூனி" பக்கம் போனா பிறகு அங்கையும் உப்படி தான் கண்ணால மட்டும் தான் பார்த்தது பாருங்கோ..எங்கன்ட தமிழ் பெட்டைகள் இருக்கீனம் அல்லோ அவையள் ஓடி போய் வெள்ளை பெடியன்களோட அன்பை பரிமாறுறது என்டா அவைக்கு அலாதி பிரியம்.. (நாங்களும் தான் இருக்கிறோம் கண்டு கொள்ளவே மாட்டாளவை)..

உப்படியே நாட்கள் கடக்கையில்..(நண்பர்கள் வட்டம் விரிவடைய யூனியில)..அட நம்மளிற்கும் அன்பு பரிமாறபட்டது அல்லோ..அட என்னும் மறக்க மாட்டன் முதல் அன்பு பரிமாற்றத்தை..(அது வந்து விடுமுறை முடிந்து யூனிக்கு போகக்க சக வெள்ளை நண்பியால் பரிமாறபட்டது தான்)..

என்ன பார்க்கிறியள் அட அன்பு என்டு சொல்லி இருக்கிறன் தானே...(ஆனா உந்த விசயத்தை ஒருத்தரும் அம்மாவிட்ட போட்டு கொடுத்திடாதையுங்கோ பிறகு மறுபடி தும்புதடிக்கு வேலை வந்திடும்) ..போக போக உது எல்லாம் சகஜமா போயிட்டு ஆனா நேக்கு வேலையில இருக்கிற பாட்டிமார்கள் "காய் மை டியர்" என்டு சொல்லி அன்பை வெளிபடுத்துவார்கள்...(அவைக்கு தெரியுமோ நேக்கு உந்த பாட்டிமார்களின்ட அன்பு எல்லாம் பிடிக்காது என்டு)...

எனக்கு ஒரு கெட்டபழக்கம் யாரும் "முத்தம்" தந்தா நான் போய் முகத்தை துடைக்கிறனான் அல்லாட்டி கழுவுறனான் ஏனோ எனக்கு பழகி போச்சு..(அரியண்டமா இருக்கு)..சரி உதை விடுவோம் எனி நாங்க எங்கன்ட ஆட்களை பற்றி எனி பார்போம் என்ன..

உப்படி வெள்ளைகள் எல்லாம் செய்யீனம் தானே என்டு போட்டு நம்மன்ட "சிட்னி டமிழ்ஸ்" இருக்கீனம் தானே அவையளும் அன்பை இவ்வாறு பரிமாற தொடங்கிவிட்டார்கள்..(அட அடித்து சொல்லுறன் உவையள் அன்பை பரிமாறக்க கூட "சனியன்" எப்ப போய் தொலைவான் என்டு தான் மனசிற்குள்ள நினைப்பீனம் பாருங்கோ)..

உப்படி தான் அன்னைக்கு நான் ஒரு வீட்ட போனனான்..(தெரிந்த ஆட்களின்ட வீடு தான்)..அங்கையும் உப்படி தான் சின்னனில இருந்து பெரிசு வரைக்கும் உப்படி அன்பை பரிமாறிச்சினம்..நன்ன விசயம் தான் பாருங்கோ இல்ல என்டு சொல்லவில்லை..

உது பத்தாது என்டு அன்னைக்கு நான் "ஸ்டேசனில" நின்று கொண்டிருக்கும் போது தமிழ் பெட்டை ஒருவா பக்கத்தில நின்றவா கொஞ்சத்தலா அவாவின்ட நண்பி வர..(ஓடி போய் "உம்மா" கொடுக்கிறவாம்)..எங்களை கண்டா உவையள் என்னும் கொஞ்சம் கூடுதலா செய்வீனம் அது வேற விசயம் பாருங்கோ..(ஆனா பார்க்கிற எங்களாள தான் சகிக்க முடியல்ல பாருங்கோ)..நானும் அப்ப நினைத்தனான் தான் பக்கத்தில இருக்கிறன் என்ட நண்பனிற்கும் நானும் ஓடி போய் முத்தம் கொடுகட்டோ என்டு ஆனா அவன் என்னை தப்பா நினைத்திட்டாலும் என்டு நான் கொடுகல...

உதை எல்லாம் பார்த்த போது..(வெள்ளை உண்மையில அன்பை தான் பரிமாறுறது விளங்கிச்சு)..உவையள் ஆட்களிற்கு படம் காட்ட தான் உது என்ட மாதிரி விளங்கினாளும் உள்ளுகுள்ள ஒரு சந்தேகம் ஒரு வேளை "முத்தம் கொடுத்து அன்பை வெளிபடுத்துவது தமிழ் பண்பாடா" என்டு..எனக்கு வேற உப்ப சோதனை நடந்து கொண்டிருக்கு என்டாலும் என்ட சந்தேகத்தை ஒருக்கா கேட்டா தான் நிம்மதியா சோதனை செய்யலாம் என்டு போட்டு கேட்டனான் பாருங்கோ..

மறுபடி எல்லாருக்கும் என்ட அன்பான முத்தங்கள்..(என்ன பார்க்கிறியள் நானும் அன்பை பரிமாறுறன் பாருங்கோ)..சரி நான் அங்கால போக பிறகு இங்கால வந்து ஏசுறதில்ல சொல்லிட்டன்..





"நீ முத்தம் ஒன்டு கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கபட்டு சிரித்தா செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்".......





அப்ப நான் வரட்டா!!